close
Choose your channels

இன்று மாலை 5 மணிக்கு செம்ம விருந்து.. அஜித்தின் பிறந்த நாளில் போனிகபூர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..

Monday, May 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அஜித்தின் ’நேர்கொண்ட பார்வை’ ’வலிமை’ மற்றும் ’துணிவு’ ஆகிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ள சூப்பர் அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

மே 1 என்றால் உலகம் முழுவதும் தொழிலாளர் தினம் கொண்டாடப்படும் நிலையில் அஜித் ரசிகர்கள் மட்டும் அஜித்தின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருவார்கள் என்பதும் இன்று காலை முதலே அஜித்தின் பிறந்த நாள் குறித்த ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தனது சமூக வலைதள பக்கத்தில் ’துணிவு’ படத்தில் இடம்பெற்ற ’கேங்ஸ்டா’ என்ற பாடலின் வீடியோ இன்று மாலை ஐந்து மணிக்கு அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.

எச் வினோத் இயக்கத்தில், ஜிப்ரான் இசையில் அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை விவேகா மற்றும் சபீர் எழுதியிருந்தனர் என்பதும் சபீர் மற்றும் ஜிப்ரான் பாடி இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இன்று மாலை 5 மணிக்கு இந்த பாடலை பாடலின் வீடியோவை பார்த்து ரசிக்க ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment