போனிகபூர் குடும்ப உறுப்பினருக்கு கொரோனா: அறிகுறியின்றி தாக்கியதால் அதிர்ச்சி
- IndiaGlitz, [Sunday,September 06 2020]
அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தை தயாரித்து வரும் போனிகபூர் வீட்டில் பணி செய்து கொண்டிருந்த 23 வயது இளைஞர் ஒருவருக்கும் அவருடைய வீட்டில் பணிசெய்த மேலும் இருவருக்கும் அடுத்தடுத்த சில நாட்களில் கொரோனா பாசிட்டிவ் தற்போது உறுதி செய்யப்பட்து.
இதனை அடுத்து போனி கபூர் மற்றும் அவரது இரண்டு மகள்களான ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஆகியோர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், ஆனால் மூவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டதாகவும் மும்பை சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் போனிகபூரின் மூத்த மனைவியின் மகனும் பாலிவுட் நடிகருமான அர்ஜூன் கபூருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை உறுதி செய்த அர்ஜூன் கபூர் தனக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும், இதனையடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி தன்னை தானே வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாகவும் சமூக வலைத்தளத்தில் அர்ஜூன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த நோயில் இருந்து நிச்சயம் மீண்டு வருவேன் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும், தனது உடல்நிலை குறித்து அவ்வப்போது தகவல் தெரிவிப்பேன் என்றும் அர்ஜூன் கபூர் தெரிவித்துள்ளார்.