கர்நாடக தேர்தல் அதிகாரிகளின் கெடுபிடியால் சிக்கலில் மாட்டிய போனிகபூர். பரபரப்பு தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கர்நாடக தேர்தல் அதிகாரிகள் கெடுபிடி காரணமாக போனி கபூர் காரில் இருந்த லட்சக்கணக்கான மதிப்பிலான வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மே பத்தாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனை அடுத்து வாகனச் சோதனைகளில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் இருந்து மும்பைக்கு கார் மூலம் கொண்டு செல்லப்பட்ட ரூ.39 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கார் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூருக்கு சொந்தமானது என்பதும், இந்த வெள்ளி பொருட்கள் அவருடைய குடும்பத்திற்கு சொந்தமானது என்றும் தெரியவந்துள்ளது.
இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் 39 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டதை அடுத்து தேர்தல் அதிகாரிகள் அந்த பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாகவும், உரிய ஆவணங்களை காண்பித்து அந்த பொருட்களை போனிகபூர் குடும்பத்தினர் எடுத்துச் செல்லலாம் என்று தேர்தல் அதிகாரிகள் கூறியதாக வெளியாகி உள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments