close
Choose your channels

மகனுக்குப் பிறந்த நாள்… தயாரிப்பாளர் போனி கபூர் பகிர்ந்த அட்டகாசமான புகைப்படம்!

Monday, June 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய சினிமாவில் முக்கிய தயாரிப்பாளர்களுள் ஒருவராக இருந்துவரும் போனி கபூர் தனது மகனும் நடிகருமான அர்ஜுன் கபூரின் பிறந்த நாளுக்காக இன்ஸ்டாவில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி, பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் என்பதும் ஏற்கனவே போனி கபூருக்கு முதல் திருமணத்தின் மூலம் இரண்டு குழந்தைகள் இருந்தனர் என்பதும் ரசிகர்கள் அறிந்ததுதான். இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூரின் முதல் மகனான அர்ஜுன் கபூர் தற்போது பாலிவுட்டில் முக்கிய நடிகர்களுள் ஒருவராக இருந்து வருகிறார்.

கடந்த 2003 இல் துணை இயக்குநராக சினிமாவில் அறிமுகமான அர்ஜுன் கபூர் தொடர்ந்து 2012 இல் ‘இஷாகி ஜாதே’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி ‘குண்டே’ போன்ற பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது 38 வயதாகும் அவர் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் மகனின் பிறந்த நாளுக்கு தயாரிப்பாளர் போனி கபூர் அழகான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்தில் ‘தெகிம்பு’, ‘மிலி’, ‘நெஞ்சுக்கு நீதி’, ‘பாம்பே கேர்ள்’, ‘மைதான்’, போன்ற பல திரைப்படங்களைத் தயாரித்த நிலையில் தமிழில் ‘துணிவு‘, ‘வலிமை’, ‘நேர்கொண்ட பார்வை’ போன்ற திரைப்படங்களைத் தயாரித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் வெளியாகிய ‘தூ ஜுதி மைன் மக்கார்’ திரைப்படத்தில் அவர் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

நடிகை ஸ்ரீதேவி – போனி கபூர் தம்பதிகளைத் தவிர அவர்களது மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவராக இருந்து வருகிறார். இவர்களைத் தவிர இளைய மகள் குஷி கபூரும் தற்போது ‘தி ஆர்ச்சீஸ்‘ திரைப்படத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற நடிகர் அர்ஜுன் கபூரின் 38 ஆவது பிறந்த நாள் விழாவில் போனி கபூர், அவரது மகள் அன்ஷுலா கான், மற்றொரு மகள் குஷி கபூர், நடிகை மலைக்கா அரோரா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இன்ஸ்டாவில் போனி கபூர் பகிர்ந்த பிறந்த நாள் பரிசு புகைப்படமும் ரசிகர்களிடையே வாழ்த்துகளைக் குவித்து வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment