'வலிமை'க்கு அடுத்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த போனிகபூர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ மற்றும் ’வலிமை’ ஆகிய படங்களை தயாரித்து உள்ளார் என்பதும் தற்போது ’வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்தப் படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தையும் போனிகபூர் தான் தயாரிக்க உள்ளார் என்றும் இந்த படத்தையும் அவர் ஒரு பண்டிகை நாளில் வெளியிட திட்டமிட்டு உள்ளதாகவும் அனேகமாக அடுத்த ஆண்டு தீபாவளி தினத்தில் ’தல 61’ என்று கூறப்படும் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ’வலிமை’ படம் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்த நிலையில் அவர் தயாரித்த இன்னொரு திரைப்படம் 2022ஆம் ஆண்டு ஜூன் மூன்றாம் தேதி வெளியாகும் என்று அறிவித்து உள்ளார்.
அஜய் தேவ்கான், ப்ரியாமணி உள்பட பலர் நடித்த பாலிவுட் திரைப்படம் ’மைதான்’. கால்பந்து பயிற்சியாளர் சையது அப்துல் ரஹிம் என்பவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான இந்த படத்தை அமித் ரவிந்திரநாத் என்பவர் இயக்கியுள்ளார். பாலிவுட் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The unknown true story that will make every Indian proud, ‘Maidaan’, to release worldwide in cinemas on 3rd June, 2022. @ajaydevgn @priyamani6 @raogajraj @akash77 @joyarunava @iAmitRSharma @freshlimefilms @SaiwynQ @ActorRudranil @writish @saregamaglobal @ZeeStudios_ pic.twitter.com/xU0pNZIUYU
— Boney Kapoor (@BoneyKapoor) September 30, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments