ரஜினிகாந்த் படத்தை தயாரிக்கவிருப்பது உண்மையா? போனிகபூர் விளக்கம்!

பிரபல பாலிவுட் இயக்குனரும் அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ ’வலிமை’ போன்ற படங்களை தயாரித்தவருமான போனிகபூர் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளி வர இருப்பதாகவும் இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் செய்திகள் மிக வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து போனி கபூர் தனது சமூக வலைத்தளத்தில் விளக்கமளித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பல வருடமாக எனக்கு நெருங்கிய நண்பராக உள்ளார். நாங்கள் அடிக்கடி சந்தித்து எங்களுடைய எண்ணங்களை பகிர்ந்து கொள்வோம். ஒருவேளை நாங்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தை உருவாக்குவதாக இருந்தால் என்னிடம் இருந்து தான் முதல் அறிவிப்பு வரும். எனவே தயவு செய்து நீங்களாகவே கற்பனையாக ஒரு செய்தியை வெளியிட வேண்டாம்’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனை அடுத்து போனி கபூர் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பது இப்போதைக்கு உறுதி செய்யப்படவில்லை என்பது என்பது குறிப்பிடத்தக்கது.