'வலிமை' படத்தில் போனிகபூர் மகள் நடித்தாரா? ஆச்சரிய தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் உலகம் முழுவதும் ஜனவரி 13-ஆம் தேதி ரிலீசாக உள்ளது என இப்போதுவரை செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும் தமிழக அரசு வரும் 10ஆம் தேதி எடுக்கும் முடிவை பொறுத்தே ’வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதியும் உறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த நிமிடம் வரை ’வலிமை’ திரைப்படத்தின் ரிலீஸ் உறுதி என்று தான் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் அமெரிக்காவில் ஜனவரி 12ஆம் தேதி ’வலிமை’ படம் ரிலீசாக உள்ளதாகவும் அதற்கான முன்பதிவுகள் தொடங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க திரையரங்குகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த படத்தில் அஜித்துடன் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் நடித்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய வேடத்தில் யாமி கவுதமியும் நடித்து உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் மற்றும் யாமி கவுதமி ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது
மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் என்றும், ஜிப்ரான் பின்னணி இசை அமைத்துள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். ஆனால் அமெரிக்க திரையரங்கின் அறிவிப்பில் ஜிப்ரான் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது யுவன் ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout