சூர்யாவின் 'கர்ணா' படத்தின் நாயகி இவர்தான்: உறுதி செய்த 'வலிமை' தயாரிப்பாளர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சூர்யா நடிக்க இருக்கும் ‘கர்ணா’ படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் ஜான்வி கபூர் நடிக்கவிருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’கங்குவா’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகும் ’புறநானூறு’ என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
அதுமட்டுமின்றி சூர்யாவின் நடிப்பில் ‘கர்ணா’ என்ற பான் - இந்திய திரைப்படம் உருவாக இருப்பதாகவும் மகாபாரதத்தை பின்னணியாக கொண்ட இந்த படம் மிகவும் பிரம்மாண்டமாக 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் ஜான்வி கபூர் நடிப்பதை ’வலிமை’ உட்பட ஒரு சில தமிழ் படங்களையும் ஏராளமான பாலிவுட் படங்களையும் தயாரித்த போனி கபூர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ராம் சரண் தேஜாவின் 16-வது படத்திலும், சுர்யா படத்திலும் தனது மகள் ஜான்வி கபூர் நடிப்பதாக அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய நிலையில் சூர்யாவின் படம் ‘கர்ணா’ என்பதுதான் தற்போது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் ‘கர்ணா’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments