மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு இன்று சிறப்பான நாள்… 'த்ரோபேக்' புகைப்படம் வெளியிட்ட போனி கபூர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய சினிமாவில் முக்கிய தயாரிப்பாளர்களுள் ஒருவராக இருந்துவரும் போனி கபூர் தனது மனைவியும் மறைந்த நடிகையுமான ஸ்ரீதேவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் கேப்ஷனில் அவர் ஒரு குறுஞ்செய்தியை பதிவிட்ட நிலையில் ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சி கலந்த வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருந்து பல வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் பாலிவுட்டில் அறிமுகமாகி இந்தியா முழுக்கவே பிரபலமானார். கிட்டத்தட்ட 400 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்திருந்தார். இந்நிலையில் இந்தி சினிமா தயாரிப்பாளராக இருந்துவந்த போனி கபூரை காதலித்து கடந்த 1996 ஜுன் 2 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்.
பிரபல தயாரிப்பாளரான போனி கபூர், மோனா ஹோரி என்பவரைத் திருமணம் செய்துகொண்டு அர்ஜுன் கபூர், அன்சுலா கபூர் என்று இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்த நிலையில் அவரிடம் இருந்து விவாகரத்துப் பெற்று பின்னர் நடிகை ஸ்ரீதேவியை திருமணம் செய்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி பாலிவுட் சினிமாவில் நட்சத்திரத் தம்பதிகளாக இருந்துவந்த நடிகை ஸ்ரீதேவி – போனி கபூர் தம்பதிகளுக்கு கடந்த 1997 இல் ஜான்வி கபூர் என்ற மகளும் 2000 இல் குஷி கபூர் என்ற மகளும் பிறந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்குப் பிறகும் சினிமாவில் கவனம் செலுத்திவந்த நடிகை ஸ்ரீதேவி தமிழ் சினிமாவில் கடைசியாக 2015 இல் ‘புலி‘ திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார். இந்நிலையில் துபாய் விருந்து விழா ஒன்றில் கலந்துகொண்ட இவர் கடந்த 2018 பிப்ரவரி 28 ஆம் தேதி உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் மனதையும் கொள்ளைக் கொண்டிருந்த நடிகை ஸ்ரீதேவி இந்திய சினிமாவைப் பொறுத்தவரைக்கும் நம்பிக்கை நட்சத்திரமாகவே பார்க்கப்பட்டு வந்தார். இந்நிலையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி – போனி கபூர் தம்பதிகளுக்கு இன்று 25 ஆவது திருமண நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தச் சிறப்புத் தினத்தை நினைவுகூரும் வகையில் போனி கபூர் தனது மனைவி ஸ்ரீதேவியுடன் வெனிசுலாவில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும் மலரும் நினைவுகளுடன் மகிழ்ச்சி கலந்த வருத்தத்தை வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments