மீண்டும் போனிகபூர்-எச்.வினோத் கூட்டணி: ஆனால் இம்முறை அஜித் ஹீரோ இல்லை!
Send us your feedback to audioarticles@vaarta.com
போனிகபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகிய ‘நேர் கொண்ட பார்வை’ மற்றும் ’வலிமை’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் வசூல் அளவில் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளன. இதனை அடுத்து அஜீத் நடிக்கும் ’அஜித் 61’ படத்தை எச் வினோத் இயக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தையும் போனிகபூர் தயாரித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’அஜித் 61’ படத்தை அடுத்து எச் வினோத் இயக்கும் இன்னொரு படத்தையும் போனிகபூர் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த படத்தில் அஜித் இல்லை என்றும் அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்றும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் யோகிபாபு நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மாஸ் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து வரும் விஜய் சேதுபதியை முதல்முறையாக முழுக்க முழுக்க ஒரு காமெடி கேரக்டரில் நடிக்க வைக்கப் போவதாக அவருடன் முழுவதும் டிராவல் ஆகும் கேரக்டரில் யோகிபாபு நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
‘அஜித் 61’ படப்பிடிப்பு மூன்று மாதங்களில் முடிந்துவிடும் என்றும், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் போனி கபூர் தயாரிப்பில் தொடர்ச்சியாக நான்காவது படத்தை எச் வினோத் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments