மழலையர் பள்ளி மீது குண்டுவீச்சு… உக்ரைனில் அதிகரிக்கும் போர்ப்பதற்றம்!

  • IndiaGlitz, [Friday,February 18 2022]

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர்ப் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உலகநாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக கருத்துத் தெரிவித்துவரும் நிலையில் உக்ரைனின் நாட்டின் எல்லைப் பகுதியில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களை ரஷ்யா தற்போது குவித்து வைத்திருக்கிறது.

மேலும் அந்நாட்டின் கிழக்கு ஸ்டானிட்சியா மாகாணத்தின் லுகன்ஸ்காட் பகுதியிலுள்ள மழலையர் பள்ளி மீது இன்று மதியம் குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. பள்ளியின் உடற்பயிற்சி கூடத்தில் குண்டுவீச்சு நடைபெற்றதால் தற்போது அந்தப் பள்ளியில் இருந்த 20 குழந்தைகள் மற்றும் 18 ஊழியர்கள் பத்திரமாக உயிர்த் தப்பியுள்ளனர். இந்த குண்டுவீச்சுத் தாக்குலைத் தொடர்ந்து ரஷ்யா மிகவும் ஆக்ரோஷமாக முன்னோக்கி வந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

மேலும் உலக நாடுகள் உக்ரைனுக்காக குரல் கொடுத்துவரும் நிலையில் ரஷ்யா- ஐரோப்பியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான இரண்டாம் உலகப்போருக்கு வழி வகுத்துவிடுமோ என்ற அச்சத்தையும் மற்றொரு சாரார் வெளியிட்டு வருகின்றனர். முன்னதாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவுகள் எட்டப்படாத நிலையில் உலக நாடுகள் முழுக்கவே உக்ரைன் பற்றிய பதற்றம் அதிகரித்திருக்கிறது.

எதற்காக போர்?

சோவியத் கூட்டணி நாடுகளுள் ஒன்றாக இருந்த உக்ரைன் கடந்த 1991 ஆம் ஆண்டு ரஷ்யாவை விட்டு பிரிந்துவந்தது. ஆனாலும் வர்த்தம், பொருளதாரம் போன்ற விஷயங்களுங்காக உக்ரைன் இன்றைக்கு வரைக்கும் ரஷ்யாவையே சார்ந்திருக்க வேண்டிய தேவையில் இருந்துவருகிறது. இதை எதிர்த்து உக்ரைன் நாட்டு மக்கள் கடந்த 2005, 2011 போன்ற ஆண்டுகளில் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

உக்ரைன் நாட்டைப் பொறுத்தவரை ஐரோப்பிய வர்த்தகத்தில் பங்குக் கொள்ள வேண்டும், பொருளாதாரத்தில் தற்சார்புடைய நாடாக மாற வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறது. இதற்காக ஐரோப்பிய யூனியன் வர்த்தகத்தின் நேட்டா உறுப்பினர் பிரிவில் இணைவதற்கான முயற்சியில் கடந்த சில ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது.

இதை விரும்பாத ரஷ்யா உக்ரைன் மீது போர்த்தொடுத்த அந்த நாடு முழுவதையும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர தற்போது முயற்சிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துக் கூறுகின்றனர். காரணம் உக்ரைன் ஐரோப்பிய யூனியனுடன் இணைந்து பொருளாதார தற்சார்பு பெறும்போது ரஷ்யாவின் பொருளாதாரக் கொள்கைகளில் பல மாறுதல்களைச் செய்ய வேண்டியிருக்கும்.

மேலும் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் ஒரு நாடு ஐரோப்பிய யூனியனில் பங்குகொள்வதையும் அது விரும்பவில்லை. இந்தக் காரணத்திற்காகத்தான் தற்போது ரஷ்யா உக்ரைன் மீது போர்ப் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கு இடையே கடந்த 8 ஆண்டுகளாக போர்ப்பதற்றம் இருந்துவந்த நிலையில் தற்போது அது தீவிரம் அடைந்து இருக்கிறது.

மேலும் இதேபோன்ற ஒரு போர்ப் பதற்றத்தில் கடந்த 2014 இல் ரஷ்யா, கிரிமியாவை கைப்பற்றிக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இதே நிலைமை உக்ரைனுக்கும் ஏற்படுமோ என்பதே உலக நாடுகளின் அச்சமாக இருந்துவருகிறது.

More News

1,000 காதலிகளைக் கொண்ட விசித்திர மனிதனுக்கு 1,045 வருடச்சிறை… நடந்தது என்ன?

துருக்கிய நாட்டைச் சேர்ந்த மதப் போதகர் ஒருவருக்கு இஸ்தான்புல் நீதிமன்றம் கடந்த ஆண்டு 1,045 வருடங்கள் சிறை

தங்கையின் கடைசி ஆசை… 9 கோடி ரூபாயை திருப்பதி கோவிலுக்கு நன்கொடை வழங்கிய அக்கா!

சென்னையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் திருமணம் செய்துகொள்ளாத

பத்ம விருது பெற்ற பழம்பெரும் நடிகையுடன் லஞ்ச் சாப்பிட்ட ரம்யா கிருஷ்ணன்!

சமீபத்தில் பத்ம விருது பெற்ற பழம்பெரும் நடிகையுடன் லஞ்ச் சாப்பிட்ட அனுபவத்தை நடிகை ரம்யா கிருஷ்ணா தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோவாக வெளியிட்டுள்ள நிலையில்

பாத் டப்பில் போட்டோஷுட் நடத்திய நடிகை ஆலியா பட்… வைரலாகும் புகைப்படம்!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் ஆலியா பட் ஒரு வித்தியாசமான போட்டோஷுட்டை முயற்சித்து

என் கூட இருக்குறவங்க எப்பவும் பயப்பட கூடாது: 'எதற்கும் துணிந்தவன்' டீசர்

சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து வரும் மார்ச் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம்