ரஜினி, விஜய்யை அடுத்து அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Saturday,July 18 2020]

நடிகர் அஜித்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அவரது வீட்டில் சோதனை செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன் ரஜினி வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருந்ததாக மிரட்டல் போன் வந்தது. அதன்பின் விஜய் வீட்டிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என மர்ம தொலைபேசி மிரட்டல் வந்தது. இந்த இரண்டு விஷயத்திலும் மனநிலை சரியில்லாதவர்கள் மிரட்டல் விடுத்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் ரஜினி, விஜய்யை அடுத்து தற்போது சென்னை ஈச்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர்களின் இந்த மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் முதல்கட்ட விசாரணையில் இந்த மிரட்டல் வெறும் வதந்தி என்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது

More News

'ஜெயம்' படத்தில் அறிமுகமான இளம் ஹீரோவின் திருமண தேதி!

கடந்த 2002ஆம் ஆண்டு 'ஜெயம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் நிதின். இந்த திரைப்படம் தமிழில் அதே டைட்டிலில் கடந்த 2003ஆம் ஆண்டு உருவானது

கொரோனாவை வாங்க மீன்மார்க்கெட்டில் குவிந்த சென்னை மக்கள்

ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று அசைப்பிரியர்கள் மட்டன், சிக்கன் வாங்க கடைகளில் அதிக கூட்டம் கூடுவதால் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு என அரசு அறிவித்தது.

இனி தமிழகத்தில் மாவட்டப் பிரிவினை என்ற பேச்சுக்கே இடமில்லை!!! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!!!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இனி தமிழகத்தில் எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது என தெரிவித்து இருந்தார்.

பிட்காயின் மோசடி என்றால் என்ன??? டிவிட்டர் ஹேக்கு பின்னால் ஒளிந்து இருக்கும் சர்ச்சை!!!

பிட்காயின் எனப்படும் கிரிப்டோ கரன்சி நாணய வர்த்தகத்தில் அவ்வபோது பல மோசடிகள் அரங்கேற்றப்பட்டு வருகிறது.

கொரோனாவால் கருவில் இருக்கும் குழந்தைக்கும் சிக்கலா???? விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!!

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களின் நீர்த்துளிகள் மூலமாகப் பரவும் எனப் பொதுமக்களிடம் அனைத்து நாட்டு சுகாதாரத்துறையும் கடுமையாக எச்சரித்து வருகிறது.