சோறு போடாத மனைவியை பழிவாங்க முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சென்னை நபரால் பரபரப்பு

  • IndiaGlitz, [Friday,July 10 2020]

சோறு போடாத மனைவியை பழிவாங்க தமிழக முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சென்னை நபர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

சென்னையில் உள்ள முதல்வர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு திடீரென மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. இந்த அழைப்பில் பேசிய மர்மநபர் தமிழக முதல்வரின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், முடிந்தால் அதனை கண்டுபிடித்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டு போனை வைத்துவிட்டார்

இதனை அடுத்து அந்த எண்ணை டிரேஸ் செய்த போலீசார், அந்த அழைப்பு சேலையூர் பகுதியை சேர்ந்த வினோத் கண்ணன் என்பவருடைய மொபைல் என தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக வினோத் கண்ணன் வீட்டிற்கு சென்ற போது முதலில் தான் வெடிகுண்டு மிரட்டல் விடவில்லை என மறுத்த நிலையில் அதன் பின்னர் தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை ஒப்புக்கொண்டார்

பிறகு அவரிடம் விசாரணை செய்தபோது ’தனது மனைவி தனக்கு சாப்பாடு போடவில்லை என்றும், அதனால் மனைவியை பழி வாங்குவதற்காக முதல்வர் வீட்டுக்கு வெடி குண்டு வைத்ததாக மிரட்டல் விடுத்ததாகவும் கூறியுள்ளார். ஏற்கனவே இவர் கடந்த ஆண்டும் இதே போல் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தமிழக முதல்வர் வீடு உள்பட பல இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டி உள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து அவரிடம் போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்

More News

ரஜினி பட தயாரிப்பாளருக்கு கொரோனா? மருத்துவமனையில் அனுமதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லிங்கா' உள்பட பல வெற்றி திரைப்படங்களை தயாரித்தவர் ராக்லைன் வெங்கடேஷ். இவர் சிம்பு நடித்த 'தம்', விக்ரம் நடித்த 'மஜா' ஆகிய தமிழ் படங்களையும் பல தெலுங்கு

பிரபல ரவுடி விகாஷ் துபே என்கவுண்டரில் சுட்டு கொலையா? பெரும் பரபரப்பு

உத்தரப்பிரதேசத்தில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 காவலர்களை சுட்டுக்கொன்றதாக கைதான ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை என தகவல் வெளிவந்துள்ளதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

பிரபல வில்லன் நடிகரின் சிகிச்சைக்கு உதவிய கமல்!

பிரபல வில்லன் நடிகரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான பொன்னம்பலம் தற்போது உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மீண்டும் 4000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: வழக்கம்போல் மீண்டு வரும் சென்னை!

தமிழ்நாட்டில் இன்று 4231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் சென்னையில் மட்டும் இன்று 1216 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும்

பிரபல பாடகர் கொல்லப் பட்டதற்காக வெடித்த போராட்டம்!!! வன்முறையாக மாறியதால் நடந்த கொடூரம்!!!

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தோப்பியாவில் ஒரு பிரபல பாடகர் மர்ம நபர்களால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.