அதர்வா-ஆர்.கண்ணன் படத்தில் வலுவான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித்தின் 'விவேகம்' படத்தில் விவேக் ஓபராய், ரஜினியின் '2.0' படத்தில் அக்சயகுமார் என பாலிவுட் நடிகர்கள் வில்லன்களாக கோலிவுட் படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது அதர்வா நடிப்பில் ஆர்.கண்ணன் இயக்கி வரும் படத்தில் வலுவான வில்லன் கேரக்டரில் பாலிவுட் நடிகர் உபன் பட்டேல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவருடைய வருகை இந்த படத்தின் பலத்தை பலமடங்கு அதிகரித்துள்ளது. மேலும் இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, சதிஷ் மற்றும் சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். 'அர்ஜுன் ரெட்டி' புகழ் ராதன் இசையில், பிரசன்னா S குமார் ஒளிப்பதிவில் , R K செல்வாவின் படத்தொகுப்பில் , ஸ்டண்ட் சில்வாவின் சண்டை இயக்கத்தில், ஷிவா யாதவின் கலை இயக்கத்தில் உருவாகவுள்ளது.
இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் அதர்வா, மேகா ஆகாஷ் முதல்முறையாக ஜோடி சேருகின்றனர். இந்த படம் குறித்து இயக்குனர் ஆர்.கண்ணன் கூறியதாவது: இப்படத்தின் வில்லன் கதாபாத்திரம் மிகவும் வலுவான மற்றும் சவாலான ஒன்று . இந்த கதாபாத்திரத்தில் நடிக்க உபன் படேலை அணுகி அவரிடம் இப்படத்தின் கதையையும் அவரது கதாபாத்திரத்தையும் சொன்னேன். கதையை கேட்ட உடனேயே நடிக்க ஒப்புக்கொண்டார். அவருக்கு கதை அவ்வளவு பிடித்திருந்தது. நிறைய வில்லன் கதாபாத்திரங்கள் அவரை நோக்கி வந்துக்கொண்டிருப்பதாகவும் ஆனால் இந்த கதை தான் அவரை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த கதாபாத்திரத்திற்கு அவர் தான் மிகவும் பொருத்தம் என உறுதியாக நம்புகிறேன். இந்த படம் அவரை அடுத்த தளத்திற்கு நிச்சயம் கொண்டு செல்லும். அவரது இந்த கதாபாத்திரத்தின் தோற்றம் மற்றும் கெட் அப் ஆகியவை மிகவும் ப்ரத்யேகமாகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். கிளைமாக்ஸ் காட்சியில் கதாநாயகன் அதர்வாவுக்கு உபன் படேலுக்கு இடையில் நடக்கும் சண்டை காட்சி இப்படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக நிச்சயம் இருக்கும்'' என்று கூறியுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout