அமெரிக்காவில் ஒரு ஐபிஎல் தொடர்: மிகப்பெரிய தொகையை முதலீடு செய்யும் பிரபல நடிகர்!

இந்தியாவில் ஐபிஎல் போட்டி என்பது ஒவ்வொரு ஆண்டும் ஒரு திருவிழா போல் நடந்து கொண்டிருக்கிறது என்பதும் கோடிக்கணக்கான பணம் இதில் வருவாய் கிடைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவை பார்த்து அதன் பின்னர் இலங்கை, பாகிஸ்தான் உள்பட பல நாடுகள் கிரிக்கெட் தொடரை நடத்தினாலும் ஐபிஎல் போன்று பணம் கொழிக்கும் தொடர் வேறு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஐபிஎல் போலவே அமெரிக்காவிலும் ஒரு மிகப்பெரிய டி20 கிரிக்கெட் தொடரை ஆரம்பிக்க தற்போது திட்டமிடப்பட்டு வருகிறது. பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஒரு சில நிறுவனங்களுடன் இணைந்து அமெரிக்காவில் மிகப்பெரிய கிரிக்கெட் தொடர் ஒன்றை அடுத்த ஆண்டு முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளார். ஷாருக்கானுடன் நடிகை ஜூஹி செளலா மற்றும் அவரது கணவரும் பார்ட்னராக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டு என்பது பெரிய அளவில் பிரபலம் அடையவில்லை என்றாலும் கிரிக்கெட் ரசிகர்கள் அங்கு ஏராளமாக இருக்கின்றனர் என்பதால் அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த இந்த தொடர் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 2022ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் மெகா டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறும் என்றும் இந்த தொடரின் மூலம் மிகப்பெரிய வருவாய் கிடைப்பது மட்டுமின்றி அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டை பிரபலப்படுத்தும் ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் கூறப்படுகிறது.