சினிமாவில் இருந்து விலக முடிவெடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர்: கண்ணீர் விட்டு அழுத முன்னாள் மனைவி

பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர் சினிமாவில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளதாக அறிவித்ததை அடுத்து அவருடைய முன்னாள் மனைவி கண்ணீர் விட்டு அழுததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் அமீர்கான் கடந்த பல ஆண்டுகளாக திரையுலகில் சூப்பர் ஸ்டார் நடிகராக இருந்து வருகிறார். இவர் நடித்து முடித்துள்ள ’லால் சிங் சாத்தா’ என்ற படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீசாக உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமீர்கான் சினிமாவில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளதாகவும் சினிமா தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை மிகவும் பாதித்தது என்றும், குழந்தைகளுடன் நேரத்தை அதிகமாக செலவு செய்ய முடிவு செய்தே சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

சினிமாவில்தான் மிகப்பெரிய வெற்றி ஏராளமான ரசிகர்களை பெற்றாலும் குடும்பத்தை கவனிக்க தவறி விட்டதாகவும் இனிமேலாவது தவறை உணர்ந்து குடும்பத்தை முழு அளவில் கவனித்துக் கொள்ள முடிவு எடுத்து, சினிமாவில் இருந்து விலகி உள்ளதாகவும் கூறினார் .

இந்த முடிவை தற்போது அறிவிக்க வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன் என்றும் ஏனென்றால் நான் நடித்து முடித்துள்ள லால் சிங் சாத்தா என்ற திரைப் படத்தின் விளம்பரத்திற்காக நான் கூறுவதாக நினைப்பார்கள் என்றும் ஆனால் இப்போது அறிவிப்பதுதான் சரியான நேரம் என்பதால் அறிவித்து விட்டேன் என்றும் அமீர்கான் கூறினார்.

அமீர்கானின் இந்த அறிவிப்பை கேட்டதும் அவருடைய முன்னாள் மனைவி கிரண் கண்ணீர் விட்டு அழுததாக கூறப்படுகிறது.