'சூரரை போற்று' இந்தி ரீமேக்கில் இந்த சூப்பர் நடிகரா?

சூர்யா நடித்த ‘சூரரை போற்று’ திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ள நிலையில் சூர்யாவின் கேரக்டரில் பிரபல நடிகர் ஒருவரை நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

சூர்யா, அபர்ணா முரளி நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் உருவான திரைப்படம் ‘சூரரை போற்று’. இந்த படம் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தால் வசூலில் சாதனை செய்திருக்கும் என்றும் கூறப்பட்டது.

பிரபல தொழிலதிபர் ஜிஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் மெல்போர்னில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் விருதை பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும் தமிழில் இயக்கிய இயக்குனர் சுதா கொங்கரா ஹிந்தியிலும் இயக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் சூர்யாவின் கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

அம்மாவிற்குப் பிறந்தநாள்… முதுகில் சுமந்து வாழ்த்துக்கூறி அசத்திய இளம் நடிகை!

குழந்தை நட்சத்திரமாக சினிமா துறையில் அறிமுகமாகி பின்னர் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து தற்போது தென்னிந்திய

நடிகை சங்கவியின் செல்ல மகளை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் க்யூட் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர்தான்

காதலில் விழுந்த மாஸ்டர் மாளவிகா… இணையத்தைக் கலக்கும் வீடியோ!

மாலத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நடிகை மாளவிகா மோகன் காதலில் விழுந்துள்ளதாக கேப்ஷனில் குறிப்பிட்டு

ஜர்னலிஸம்க்கு மரியாதை கொடுங்கப்பா? பொய்செய்திக்கு சாந்தனுவின் அதிருப்தி பதிவு!

தன்னைப்பற்றிய பொய் செய்திக்கு அதிருப்தி தெரிவித்த நடிகர் சாந்தனு பாக்யராஜ் 'ஜர்னலிஸம்க்கு மரியாதை கொடுங்கப்பா? என்று பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எம். ராஜேஷின் அடுத்த படத்தின் ஹீரோ மற்றும் 2 நாயகிகள்: உறுதி செய்த நடிகர்!

இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ மற்றும் இரண்டு நாயகிகள் குறித்த தகவலை அந்த படத்தில் நடிக்கும் நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்