ஐபிஎல் 2021 இல் 9 ஆவது அணி? உரிமையாளர் யார்? பரபரப்பை ஏற்படுத்தும் புது அறிவிப்பு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் தொடரின் 13 ஆவது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அதையடுத்து அடுத்த 14 ஆவது சீசனுக்கு தேவையான வேலைகளை செய்யத் தொடங்கி இருக்கிறது இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். இந்நிலையில் வருமான இழப்பு மற்றும் விளம்பரதாரர்களின் விலகல் போன்றவை 2021 ஐபிஎல் தொடருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என பிசிசிஐ யின் தலைவர் கங்குலி தெரிவித்து இருக்கிறார்.
இதனால் 2021 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரில் புதிதாக 9 ஆவது அணியை இணைக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாகவும் கங்குலி தெரிவித்து இருக்கிறார். இந்த 9 அணி உலகிலேயே பெரிய கிரிக்கெட் மைதானத்தைக் கொண்டிருக்கும் அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு அமையலாம் எனவும் எதிர்ப்பார்க்கப் படுகிறது. இதையடுத்து புதிதாக உருவாக்கப்பட இருக்கும் 9 ஆவது ஐபிஎல் அணியை யார் வாங்கப் போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான அணியில் குஜராத்தை மையமாகக் கொண்ட லயன்ஸ் அணி இடம் பெற்று இருந்தது. ஐபிஎல் அணியை 8 ஆகக் குறைக்கும் நடவடிக்கையின்போது அந்த லயன்ஸ் அணி விலகிக் கொண்டது. அதேபோல முன்பு கேரளாவை மையமாகக் கொண்டு கொச்சி டஸ்கர்ஸ் அணியும் செயல்பட்டு வந்தது. ஆனால் விளம்பரதாரர்களிடையே ஏற்பட்ட குழப்பம் காரணமாக இந்த அணியும் விலக்கிக் கொள்ளப்பட்டது. தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் புதிதாக 9 ஆவது அணி உருவாக்கப்பட இருக்கிறது.
இந்த அணியை வாங்குவதற்கு பாலிவுட் பிரபலம் சல்மான்கான் மற்றும் மலையாள நடிகர் மோகன்லால் போன்றோர் விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஏற்கனவே நடிகை ப்ரீத்தி ஜிந்தா கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். கொல்கத்தா அணியை நடிகர் ஷாருக் மற்றும் நடிகை ஜுஹி சாவ்லா இணைந்து நடத்தி வருகின்றனர். இதேபோல் தற்போது புதிதாக உருவாக இருக்கும் 9 ஆவது ஐபிஎல் அணியை சல்மான் மற்றும் மேகன்லால் இருவரும் இணைந்து நடத்துவார்கள் எனவும் கருத்துக் கூறப்படுகிறது.
ஆனால் புதிதாக அமைய இருக்கும் 9 ஆவது அணிக்கு யார் சொந்தக்காரர் என்பது குறித்த முடிவு பிசிசிஐ நடத்த இருக்கும் ஏலத்தைப் பொறுத்தே முடிவு செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 9 அணிக்கான ஏலத்தை வருகிற பிப்ரவரி மாதத்தில் நடத்த இருப்பதாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments