பிரபல நடிகரின் படத்தில் வில்லன்களாக நடிக்கும்  நட்சத்திர ஜோடி.. யார் அவர்கள்?

  • IndiaGlitz, [Friday,September 27 2024]

பிரபல நடிகரின் படத்தில் பாலிவுட் திரையுலகின் நட்சத்திர ஜோடி வில்லன்களாக நடிக்க இருப்பதாக கூறப்படும் செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக ஒரு திரைப்படத்தில் வில்லன் அல்லது வில்லி என்று மட்டுமே கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திர ஜோடி, சைஃப் அலிகான் மற்றும் கரீனா கபூர், வில்லன், வில்லி கேரக்டர்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபாஸ் நடிக்கும் அடுத்த திரைப்படம் 'ஸ்பிரிட்'. இந்த படத்தை ’அர்ஜுன் ரெட்டி’ ‘அனிமல்’ படங்களின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார். இது பிரபாஸின் 25-வது படம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இப்படத்தில் சைஃப் அலிகான் மற்றும் கரீனா கபூர் ஜோடி வில்லன்களாக நடிப்பார்கள் என்றும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல் உள்ளது. இந்த படம் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 8 மொழிகளில் உருவாக இருப்பதாகவும், படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனவும், 2026 ஆம் ஆண்டில் இப்படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

More News

மகள்கள் வைத்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. நடிகை பூஜா குமார் க்யூட் பதிவு..!

நடிகை பூஜா குமார் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, "மகள்கள் வைத்திருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்

எங்கள் மொத்த குடும்பமும் இதுவரை இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததில்லை: விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி..!

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "எங்கள் மொத்த குடும்பமும் இதுவரை இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததே இல்லை" என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த பதிவு தற்போது

கேமிராமேனை பாராட்டியே ஆக வேண்டும்: சாயிஷா நடன வீடியோவுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

நடிகை சாயிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம்மையாக நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு கேமராமேன் பாராட்டப்பட வேண்டும் என்பது

என்னாது Big Boss-க்கு போனா Divorce ஆ ஆ ஆ ? - வெங்கடேஷ் பட்

பிரபல சமையற் கலைஞரும், குக் வித் கோமாளியின் 1,2,3 & 4 சீஸனின் ஜட்ஜாக இருந்த வெங்கடேஷ் பட் Role Reversal என்ற பாணியில் குக் வித் கோமாளி புகழ் குரோஷியுடனாட நேர்காணலில்

அனிருத் ஜோடியாகிறாரா ஸ்ரீலீலா? விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தமிழில் பிஸியான இசையமைப்பாளராக இருக்கும் அனிருத் ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்க இருப்பதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.