'கில்லி' ரீரிலீஸ் வசூல் சாதனையை முறியடித்த படம்.. குவியும் கோடிகள்..!

  • IndiaGlitz, [Sunday,September 29 2024]

விஜய், திரிஷா நடித்த ’கில்லி’ திரைப்படம் சமீபத்தில் ரீரிலீஸ் ஆன நிலையில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் ரீரிலீசின் மூலம் 26 கோடி ரூபாய் வசூல் செய்ததாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், ’கில்லி’ படத்தின் ரீரிலீஸ் வசூல் சாதனையை பாலிவுட் திரைப்படம் முறியடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2018 ஆம் ஆண்டு பாலிவுட் திரையுலகில் வெளியான தும்பாட் என்ற திரைப்படம் பேராசை பெரும் நஷ்டம் என்ற நீதியை போதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. இந்த படத்தை ரஹி அணில் பர்வே இயக்கியிருந்தார்.

தும்பாட் திரைப்படம் செப்டம்பர் 13ஆம் தேதி ரீரிலீஸ் ஆனது, புதிய தொழில்நுட்பத்துடன் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ரீரிலீஸ் ஆன பிறகு இரண்டு வாரங்களுக்குள், இந்த படம் ரூ.27 கோடிக்கு அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம், இந்திய அளவில் அதிக வசூல் செய்த ரீரிலீஸ் திரைப்படமாக தும்பாட் இருக்கிறது.

விஜய்யின் ’கில்லி’ படம் ரீரிலீசில் 26 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், தும்பாட் 27 கோடி ரூபாய் வசூலித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான தும்பாட் படம் வெறும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட நிலையில் அப்போது இந்த படம் சுமார் 16 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினிக்கு மனைவியாக நடித்தவர் விஜய்க்கு மனைவியாக நடிக்கிறாரா? 'தளபதி 69' அப்டேட்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படத்தில் அவருக்கு மனைவியாக நடித்த நடிகை, விஜய்க்கு மனைவியாக 'தளபதி 69' படத்தில் நடிக்க இருப்பதாக செய்தி கசிந்துள்ளது.

'குட் பேட் அக்லி' படத்தின் வில்லன் இவரா? 'வேதாளம்' படத்தில் மிரட்டினாரே..!

அஜித் நடித்து வரும் "குட் பேட் அக்லி" படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது, அடுத்த கட்ட படப்பிடிப்பு

'தேவாரா' படம் பார்த்த ரசிகர்கள் தியேட்டரிலேயே மரணம்.. என்ன காரணம்?

ஜூனியர் என்டிஆர் நடித்த 'தேவாரா' என்ற திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி, பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இந்தப் படத்தை தியேட்டரில் பார்த்த ரசிகர்

இந்த அடி அடிக்கிறாங்களே.. என்னடா இது கீர்த்தி சுரேஷுக்கு வந்த சோதனை.. வைரல் வீடியோ..!

கீர்த்தி சுரேஷின் தலையில் ஒரு குழந்தை உட்கார்ந்து, தலையை தபேலாவாக மாற்றி அடிக்கும் காட்சியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, 'பாவம் கீர்த்தி சுரேஷ்'

கமல்ஹாசன் AI படிக்க சென்றது இந்த படத்திற்காகவா? ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..!

உலகநாயகன் கமல்ஹாசன், மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'தக்லைஃப்' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவுக்கு ஏஐ டெக்னாலஜி படிக்க சென்றதாக கூறப்படும் நிலையில்