அஜித்தின் 'வலிமை' படத்தின் நாயகி குறித்த தகவல்

  • IndiaGlitz, [Monday,December 09 2019]

அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகவுள்ள ‘வலிமை’ என்ற திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதம் வெளிவந்தது. இதனை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என செய்திகள் வெளியாகிய நிலையில் தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் வரும் 13ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த நிலையில் இந்த படத்தில் நயன்தாரா உள்பட ஒரு சில நடிகைகள் நாயகிக்காக பரிசீலனை செய்யப்பட்டது என்று கூறப்பட்டது. சமீபத்தில் நடிகை நயன்தாரா, போனிகபூரை சந்தித்ததால் இவர்தான் இப்படத்தின் நாயகியாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் அஜித் ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் நாயகி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

யுவன் சங்கர் ராஜா இசையில், நீரவ்ஷா ஒளிப்பதிவு உருவாகவிருக்கும் இந்தப் படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்பதும் இந்த படத்தில் அஜீத் போலீஸ் கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

அருண்விஜய்-அறிவழகன் படத்தின் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள்

அருண் விஜய் நடிக்கவிருக்கும் 31வது படத்தை 'ஈரம்' இயக்குனர் அறிவழகன் இயக்கவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். ஏற்கனவே 'குற்றம் 23'

ஆர்யா-சாயிஷாவுக்கு அறிவித்த மகிழ்ச்சியான செய்தி!

நடிகர் ஆர்யாவும் அவருடைய மனைவியும் பிரபல நடிகை சாயிஷாவும் ஜோடியாக முதன் முதலில் நடித்து வரும் திரைப்படம் 'டெடி'. இந்த படத்தின் படப்பிடிப்பு க

2021ம் ஆண்டு தேர்தலிலும் ரஜினி இதையேதான் கூறுவார்: அமைச்சர் ஜெயக்குமார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் கடந்த 40 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்தாலும், திரையுலகிலும் சரி அரசியலிலும் சரி இரு துருவங்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழக நலனுக்காக டேட்டிங் செய்ய போகிறேன்: பிக்பாஸ் நடிகை அறிவிப்பு

தமிழகத்தின் நலனுக்காக நடிகர் ஒருவருடன் டேட்டிங் செய்யப்போகிறேன் என பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

'தர்பார்' பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த ராகவா லாரன்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ராகவா லாரன்ஸ் பேசிய போது சிறுவயதில் கமல் போஸ்டர் மீது சாணி அடித்ததாக தெரிவித்திருந்தார்