தென்னிந்திய அளவில் வரவேற்பு.. 'பகாசூரன்' படத்திற்கு வாழ்த்து தெரிவித்த பாலிவுட் பிரபலம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வெளியான மோகன்ஜி இயக்கத்தில் உருவான ‘பகாசூரன்’ திரைப்படம் தென் இந்திய அளவில் பிரபலம் ஆகி வருவதற்கு தனது வாழ்த்துக்கள் என பாலிவுட் பிரபலம் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பில் உருவான திரைப்படம் ‘பகாசூரன்’. இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களில் நட்டி நடராஜ், ராதாரவி உள்ளிட்ட பல நடித்துள்ளனர் என்பதும் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார் என்பதன் குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் வெளியான இந்த திரைப்படத்திற்கு ஒரு சிலர் கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தாலும் பலர் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். இதனால் இந்த படம் வெற்றி பட பட்டியலில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் தனது வாழ்த்துக்களை ‘பகாசூரன்’ குழுவினர்களுக்கு தெரிவித்துள்ளார். ‘பகாசூரன்’ திரைப்படம் தென்னிந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்று வருவதை கேட்க முடிகிறது, என்னுடைய நண்பர் நட்டி நடராஜ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் ஆகியோர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
#Bakasuran Hearing good word of mouth for this movie in South...Congrats my friend @natty_nataraj & Dir @selvaraghavan pic.twitter.com/ZXdkgpinhu
— Anurag Kashyap (@anuragkashyap72) February 19, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com