பிரபல இசையமைப்பாளர் கொரோனாவுக்கு பலி: ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் கொரோனாவுக்கு பலியானதை அடுத்து ஏஆர் ரகுமான் உள்பட பல திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பாலிவுட்டில் நதிம்-ஷர்வன் என்ற இரட்டையர்கள் பல ஆண்டுகாலமாக திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்தனர். கடந்த 1990 முதல் 2000 வரை பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த இவர்கள், கடந்த 2005 ஆம் ஆண்டு பிரிந்து தனித்தனியே இசையமைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரட்டையர்களில் ஷர்வன் என்பவருக்கும் சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதனை அடுத்து இசைப்புயல் ஏஆர் ரஹ்மான், பாலிவுட் பிரபலம் அக்ஷய் குமார் உள்பட பலர் அவரது மறைவிற்கு தங்களது சமூக வலைதளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் அவர்களும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Our Music community and your fans will miss you immensely #ShravanRathod ji Rest in peace ??Respect and Prayers??????
— A.R.Rahman #99Songs ?? (@arrahman) April 22, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com