ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் படத்திற்கு பதிலடி தான் 'வலிமை': படம் பார்த்த பிரபலத்தின் பதிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஹாலிவுட்டில் உருவான ’ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ மற்றும் ‘மிஷின் இம்பாசிபிள்’ ஆகிய படங்களுக்கு பதிலடி கொடுக்கும் இந்திய திரைப்படம் தான் ’வலிமை’ என இந்த படத்தை பார்த்த பிரபலம் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவான திரைப்படம் ’வலிமை’. இந்த படம் வரும் 24ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஜீ ஸ்டுடியோவின் பான் இந்தியா குழுவுடன் இணைந்து இந்த படத்தை பார்த்ததாக தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ள பிரபல பாலிவுட் சினிமா பிரமுகர் மற்றும் முன்னாள் சென்சார் போர்டு ஆலோசகருமான ராஜேஷ் வாசனி என்பவர் கூறியபோது, ‘ஹாலிவுட்டில் உருவான ‘ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ மற்றும் ’மிஷன் இம்பாசிபிள்’ படங்களுக்கு இந்திய சினிமாவின் பதில்தான் ’வலிமை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ’புஷ்பா’ திரைப்படம் ஆரம்பம் என்றால் ’வலிமை’ திரைப்படம் கிளைமாக்ஸ் ஆக இருக்கும் என்று அவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது இந்த படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
आगाज ऐसा है तो अंजाम कैसा होगा ! Saw #Ajith’s #VALIMAI with team Zee and blown away. An Indian answer to FF & MI, all set to blaze silver screens. The thriller from the Showman @BoneyKapoor, will take your breathe away. If #Pushpa is the beginning, #VALIMAI is the climax. pic.twitter.com/0gdjLhvPJ5
— RAJESH VASANI (@rajeshvasani) February 5, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com