விடிய விடிய போதைப்பொருள் விருந்து… 4 நடிகை, ஒரு பிக்பாஸ் போட்டியாளர் கைதான தகவல்!

  • IndiaGlitz, [Monday,June 28 2021]

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் 22 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் 4 பேர் தென்னிந்திய நடிகைகள் என்றும் ஒருவர் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மும்பை-ஆக்ரா நெடுங்சாலையில் உள்ள இகத்புரி பகுதியில் இருக்கும் 2 சொகுசு பங்களாக்களில் போதைப்பொருள் விருந்து நடப்பதாகப் போலீசாருக்கு தகவல் வந்ததை அடுத்து நேற்று அதிகாலை 2 மணிக்கு சோதனை நடத்தப் பட்டதாகவும் அந்த சோதனையில் 22 பேர் கைது செய்யப் பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஸ்கை தாஜ் மற்றும் ஸ்கை லாகூன் என அழைக்கப்படும் இந்த சொகுசு பங்களாக்களில் தடைச் செய்யப்பட்ட “ஹீக்கா“ எனும் போதைப்பொருள் பயன்படுத்தப் பட்டதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டு உள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் 12 பேர் பெண்கள் 10 பேர் ஆண்கள் என்றும் இவர்களில் 4 பேர் தென்னிந்திய நடிகைகள் மற்றும் ஒரு பிக்பாஸ் போட்டியாளர் உள்ளார் என்றும் தகவல் கூறப்படுகின்றன. இதில் மராத்திய பிக்பாஸ் போட்டியாளர் ஹீனாவும் கைது செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது ஹீனாவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் மற்றவர்களின் பெயர்களை ரகசியமாகவே வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

நயன்தாராவுக்கு முத்தம் கொடுத்த புகைப்படம்: விக்னேஷ் சிவன் விளக்கம்

நயன்தாராவுக்கு முத்தம் கொடுத்த புகைப்படம் குறித்த விளக்கம் அளித்த இயக்குனர் விக்னேஷ் சிவன் 'நான் பிசியாக இருக்கும்போது யாரோ ஒருவர் எடுத்த புகைப்படம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

100% தடுப்பூசி செலுத்திக் கொண்ட மக்கள்...! அதுவும் முன்னாள் முதல்வரின் சொந்த கிராமமாம்...!

தமிழகத்தில் காட்டூர் என்ற கிராமம் தான் முதன்முதலாக 100% தடுப்பூசி என்ற இலக்கை எட்டியுள்ளது.

கிளாமரில் பட்டையைக் கிளப்பும் "காலா" பட நாயகியின் செம வைரல் புகைப்படம்!

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் "காலா". இந்தத் திரைப்படத்தில்

திமிறும் யானையோடு போட்டோ ஷுட் நடத்திய பிக்பாஸ் நடிகை… வைரல் வீடியோ!

சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்துவரும் நடிகை சாக்ஷி அகர்வ&

மீண்டும் இணையும் ஆர்யா-சக்தி செளந்திரராஜன்: 'டெடி 2' உருவாகிறதா?

ஆர்யா நடிப்பில் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான 'டெடி' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓடிடியில் வெளியானது என்பதும் இந்த திரைப்படம் ரசிகர்கள்