கமல்ஹாசனுடன் ஜோடி சேர்கிறாரா பாலிவுட்-ஹாலிவுட் நடிகை?

  • IndiaGlitz, [Wednesday,August 03 2022]

உலக நாயகன் கமலஹாசனுடன் பிரபல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகை ஜோடி சேர இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில ஆண்டுகளாக தாமதமான நிலையில் தற்போது மீண்டும் இம்மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கமல்ஹாசன் இந்த படத்தின் பயிற்சிக்காக அமெரிக்கா சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடித்த காஜல் அகர்வால், திருமணமாகி செட்டிலாகிவிட்டதால் அவர் இந்த படத்திலிருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து காஜல் அகர்வாலுக்கு பதிலாக பாலிவுட், ஹாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே இந்த படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த ’கோச்சடையான்’ திரைப்படத்தில் நடித்த தீபிகா படுகோன் கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ படத்திலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி ’இந்தியன் 2’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த நெடுமுடி வேணு மற்றும் விவேக் ஆகிய இருவரும் காலமாகிவிட்டதை அடுத்து அவர்களுக்கு பதிலாக மாற்று நடிகர்களை ஏற்பாடு செய்யும் பணியிலும் இயக்குனர் ஷங்கர் உள்பட படக்குழுவினர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

முதல் படம் வெளியாகும் முன்னரே சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்த நடிகை!

பிரபல இயக்குனர் ஒருவரின் மகள் நடிகையாக அறிமுகமான நிலையில் அந்த படம் ரிலீஸ் ஆகும் முன்பே சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முழங்கால் அளவில் பாவாடை அணிந்து படவிழாவுக்கு வந்த பிரபல நடிகர்!

பிரபல நடிகர் ஒருவர் திரைப்பட விழாவுக்கு பாவாடையுடன் வந்ததையடுத்து திரைப்பட விழா குழுவினர் உள்பட ரசிகர்கள் பலர் ஆச்சரியமடைந்தனர். இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ

ஒரே நாளில் முடிவு செய்து அவசர அவசரமாக நடந்த கல்யாணம்: பிரபல சீரியல் நடிகை

தனது திருமணம் ஒரே நாளில் திட்டமிட்டு அவசர அவசரமாக நடந்ததாகவும், பிளவுஸ் தைக்க கூட நேரமில்லை என்றும் நண்பர்களை கூட அழைக்க முடியவில்லை

தனுஷ் வேற லெவல் நடிகர்: 41 வயது சீனியர் நடிகை பாராட்டு!

நடிகர் தனுஷ் தமிழ் திரையுலகில் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார் என்பது தெரிந்ததே.

முடியாத 'எஞ்சாய் எஞ்சாமி' பஞ்சாயத்து: அறிவு, சந்தோஷ் நாராயணனை அடுத்து 'தீ' விளக்கம்!

சந்தோஷ் நாராயணன் இசையில் அறிவு, தீ பாடிய 'எஞ்சாய் எஞ்சாமி'  என்ற தனிப்பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த பாடல் குறித்த சர்ச்சையும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது.