தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி பாலிவுட்டில் அசத்தும் 5 நடிகைகள்… யாரென்று தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,May 22 2023]

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம்வரும் பலர் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானவர்கள் என்றால் நம்ப முடிகிறதா? அந்த வரிசையில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது உலகப் பிரபலமாக இருந்துவரும் நடிகைகளும் இருக்கின்றனர். அதுகுறித்த ஒரு தொகுப்பு.

ஐஸ்வர்யா ராய்

பாலிவுட்டில் ‘தேவதாஸ்‘, ‘ஜோதா அக்பர்‘, ‘தூம்‘, ‘குரு’ என்று பல ஹிட் படங்களில் நடித்து தற்போது உலகப் பிரபலமாக இருந்துவரும் நடிகை ஐஸ்வர்யா ராய் முதன் முதலில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘இருவர்’ எனும் தமிழ் திரைப்படத்தில் தான் அறிமுகமானார். 1997 இல் உருவான இந்தத் திரைப்படத்தில் அவர் நடிகர் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த இணைப்புத்தான் தற்போது ‘பொன்னியின் செல்வன்‘ திரைப்படம் வரை நீடித்திருக்கிறது என்பதையும் ரசிகர்கள் ஊகித்து இருக்க வாய்ப்பிருக்கிறது.

பிரியாங்கா சோப்ரா

பாலிவுட் சினிமாவில் ‘பர்ஃபி‘, ‘பாஜிராவ் மஸ்தானி’, ‘டான்’, ‘ஃபேஷன்’ என்ற பல ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளுள் ஒருவரானவர் பிரியங்கா சோப்ரா. அவர் தற்போது சிட்டாடல் வெப் சீரிஸ் மூலம் உலகப் பிரபலமாகியுள்ளார். மேலும் சில ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துவருகிறார். உலக அழகிப்பட்டம் வென்ற இவர் மஜித் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘தமிழன்’ திரைப்படத்தில் கடந்த 2002 இல் அறிமுகமானவர் என்பதும் தனக்கு அறிமுகம் கொடுத்த தமிழ் சினிமா குறித்து அவ்வபோது நெகிழ்ந்து பேசி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தீபிகா படுகோன்

பாலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் தீபிகா படுகோன் பாலிவுட்டில் ‘ஓம் சாந்தி ஓம்’ திரைப்படத்தில் நடித்து இந்திய அளவில் பிரபலமானார். மேலும் ‘பிகு’, யே ஜவானி ஹை தீவானி’ போன்ற பல ஹிட் படங்களைக் கொடுத்த அவர் சமீபத்தில் வெளியான ‘பதான்’ திரைப்படத்திலும் அதிக வரவேற்பை பெற்றிருந்தார். தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் ‘ப்ராஜெக்ட் கே’ திரைப்படத்தில் நடித்துவரும் அவர் கன்னடத்தில் 2006 இல் உருவான ‘ஐஸ்வர்யா’ எனும் திரைப்படத்தில் உபேந்திராவுடன் நடித்து அறிமுகமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திஷா பதானி

பாலிவுட்டில் இறந்த நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத்துடன் ‘தி அன்டோல்ட் ஸ்டோரி‘ திரைப்படத்தில் நடித்து இந்திய அளவில் பிரபலமானவர் நடிகை திஷா பதானி. மேலும் ‘ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ்’, ‘பாகி’, ‘குங்ஃபூ யோகா’ போன்ற பல ஹிட் படங்களில் நடித்த அவர் தற்போது ப்ராஜெக்ட் கே’ திரைப்படத்திலும் இணைந்துள்ளார். மேலும் தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் ‘கங்குவா’ படத்தில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் நடிகை திஷா பதானி பிரபல இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் நடிகர் வருண்தேஜ், போசானி கிருஷ்ணா முரளியுடன் இணைந்து ‘லோஃபா’ திரைப்படத்தில்தான் முதலில் அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி சனோன்

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை கீர்த்தி சனோன் தெலுங்கு வெளியான ‘நேனோக்கடி’ திரைப்படத்தில் நடிகர் மகேஷ்பாபுடன் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அவர் தற்போது பாலிவுட் சினிமாவைத் தவிர ஒருசில பான் இந்தியா திரைப்படங்களில் நடித்து வரவேற்பு பெற்றுள்ளார்.

More News

அட… நடிகை ரம்பா மாதிரியே இருக்காங்களே… மகள் புகைப்படத்தால் வியந்த ரசிகர்கள்

90 களில் வெளியான தென்னிந்திய சினிமாக்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமான நடிகை ரம்பா தன்னுடைய மூத்த மகள் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில்

90-ஸ் கனவு ஹீரோவுடன் செல்பி எடுத்த இயக்குநர் விக்னேஷ் சிவன்… புகழ்ந்து தள்ளிய நெட்டிசன்ஸ்!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களுள் ஒருவராக இருந்துவரும் இயக்குநர் விக்னேஷ் சிவன் 90-ஸ் கிட்ஸ்களின் கனவு ஹீரோ

'பிச்சைக்காரன் 3' எப்போது? விஜய் ஆண்டனி பதில்..!

விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன் 2' கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில் இந்த படத்தின் அடுத்த பாகம் விரைவில் உருவாகும் என்று கூறப்பட்டது. இதனை அடுத்து விஜய் ஆண்டனி இது குறித்து தனது

'தளபதி 68' படத்தில் அஜித் நடிக்கிறாரா? வெங்கட்பிரபுவின் வேற லெவல் பதில்..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 68' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாகவும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும்

'STR48' படத்திற்காக வேற லெவலில் தயாராகும் சிம்பு.. இயக்குனர் என்ன சொல்கிறார்? 

சிம்பு நடிக்க இருக்கும் 'STR48'  திரைப்படத்திற்காக அவர் வேற லெவலில் லண்டனில் உடற்பயிற்சி செய்து தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.