close
Choose your channels

கொஞ்சும் இயற்கையுடன் நடிகை சன்னிலியோன்… வைரல் புகைப்படம்!

Saturday, April 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அடல்ட்ஸ் ஒன்லி மூவிக்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சன்னிலியோன். பின்னர் “ஜிம்ஸ் 2” எனும் இந்தி சினிமா மூலம் பாலிவுட் சினிமாக்களில் தலைக்காட்டத் தொடங்கினார். அதேபோல இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். அந்த வகையில் தற்போது பாலிவுட் நடிகை, மாடல் அழகி, விளம்பரப்படம் மற்றும் பிலபல டிவி ஷோக்களில் தொகுப்பாளர் எனப் பல்வேறு அவதாரங்களில் ரவுண்டு கட்டி வருகிறார் நடிகை சன்னிலியோன்.

தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் ஜெய் நடித்த “வடகறி” படத்தில் இவர் நடித்து இருந்தார். அடுத்து இயக்குநர் வடிவுடையான் இயக்கத்தில் “வீரமாதேவி” எனும் படத்தில் கதாநாயகியாகவும் அறிமுகம் ஆனார். இந்நிலையில் மீண்டும் தமிழில் இயக்குநர் யுவன் இயக்கத்தில் வரலாற்று பின்னணியோடு எடுக்கப்படும் ஒரு ஹாரர் மூவியில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தில் நடிகர் சதீஷ் மற்றும் மொட்டத்தல ராஜேந்திரனுடன் இணைந்து நடிப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது ஒரு இந்தி ரியலாட்டி ஷோவிற்காக கேரளாவில் குடும்பத்தோடு தங்கி இருக்கும் நடிகை சன்னிலியோன் எழில் கொஞ்சும் இயற்கையோடு இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸடாவிலும் பதிவிட்டு உள்ளார். ஏராளமான ஃபாலோயர்களை கொண்ட நடிகை சன்னிலியோனின் இந்தப் புகைப்படம் தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment