மேளதாளம் வைத்து விவாகரத்தைக் கொண்டாடிய நடிகை ராக்கி சாவந்த்… வைரல் வீடியோ!
- IndiaGlitz, [Wednesday,June 21 2023]
பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாகவும் சர்ச்சை நடிகையாகவும் இருந்துவரும் நடிகை ராக்கி சாவந்த் தனக்கு பிரேக் அப் ஆகிவிட்டது எனக்கூறி நடு ரோட்டில் மேளதாளத்துடன் நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
பாலிவுட்டில் ஒருசில திரைப்படங்களில் துணைப் பாத்திரங்களில் நடித்து, பின்பு கவர்ச்சி நடிகையாக வலம்வந்து கொண்டிருப்பவர் நடிகை ராக்கி சாவந்த். இவர் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கெடுத்து வருகிறார். குஜராத் மொழியில் நடைபெற்ற பிக்பாஸ் ஷோவில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார்.
இந்தி சினிமாவைத் தவிர ஒருசில தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் கவர்ச்சி நடனமும் ஆடியிருக்கிறார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ‘என் சகியே’, ‘முத்திரை’ போன்ற படங்களில் இடம்பெற்ற ஒருசில பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார். சினிமாவைத் தவிர அரசியல் மற்றும் நடனத்தில் கவனம் செலுத்திவரும் நடிகை ராக்கி சாவந்த் கடந்த 2019 இல் தொழிலதிபர் ரித்தேஷ் என்பவரை ரகசியம் திருமணம் செய்துகொண்டு பின்னர் விவாகரத்து பெற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியே வந்த இவர் தனது தாய் புற்றுநோயால் அவதிப்பட்டு வருவதாகக் கூறி தன்னை விட 11 வயது இளையவரான அடில் கான் துரானி என்பவரைத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் ராக்கி சாவந்த் தனது திருமணம் குறித்து வெளிப்படையாகத் தகவல் வெளியிட்டு இருந்தார்.
ஆனால் திருணமத்திற்குப் பிறகு சர்ச்சை வழக்கு, கைது, கணவர் கொடுமை படுத்துகிறார், வரதட்சணை கேட்கிறார் என்று பல்வேறு தகவல்கள் இவர் குறித்து வெளியாகி வந்தன. இந்நிலையில் ஓஷிவாரா காவல் நிலையத்திலும் தனது கணவர் அடில் கான் துரானி மீது நடிகை ராக்கி சாவந்த் வழக்குப் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையல் ராக்கி சாவந்த் தற்போது தனக்கு விவாகரத்து கிடைக்கப் போகிறது எனக் கூறி மேளதாளத்துடன் நடனம் ஆடி பிரேக் அப்பை கொண்டாடும் வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் இப்படியும் விவாகரத்தைக் கொண்டாடலாமா? என்று ஆச்சர்யத்தை வெளியிட்டு வருகின்றனர்.
ஏற்கனவே தமிழ் சின்னத்திரை பிரபலம் ஒருவர் தன்னுடைய விவாகரத்தை கொண்டாடி அது விமர்சிக்கப்பட்ட நிலையில் தற்போது ராக்கி சாவந்த்தின் பிரேக் அப் வீடியோ இணையத்தில் மேலும் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.