எதிர்ப்புக்கு மத்தியிலும் படு கிளாமரில் பாலிவுட் நடிகை… வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் பாலிவுட் முன்னணி நடிகை ராதிகா ஆப்தேவை, பாலிவுட் சினிமாவை விட்டே தடைசெய்ய வேண்டும் என்று ரசிகர்கள் சிலர் ஹேஷ்டேக் பதிவிட்டு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தனர். இத்தகைய எதிர்ப்புக்கு மத்தியிலும் அவர் மீண்டும் கிளாமரான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை ராதிகா ஆப்தே, தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக “கபாலி” திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்தப் படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக அழுத்தமான கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த அவர் பாலிவுட் சினிமாக்களில் படு கிளாமர் மற்றும் ஒருசில நிர்வாண தோற்றங்களிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் இதுபோன்ற வேடங்களில் அவர் நடிக்கவில்லை என்றாலும் இதுபோன்ற பழைய புகைப்படங்களையும் வீடியோக்களையும் தன்னுடைய இன்ஸ்டாவில் அவர் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இது இந்திய கலாச்சாரத்தை கெடுக்கும் வகையில் இருக்கிறது என்றும் இளைஞர்களின் தவறான பாதைக்கு வழிவகுக்கிறது என்றும் கூறி நடிகை ராதிகா ஆப்தேவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் ஹேஷ்டேக் பதிவிட்டு வந்தனர்.
இவரைத் தவிர பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் கரீனா கபூர், டாப்ஸி, தீபிகா படுகோன், கங்கனா ரனாவத் போன்ற நடிகைகளுக்கும் இதுபோன்ற எதிர்ப்பு கிளம்பியது. இத்தகைய திடீர் விமர்சனத்திற்கு ஆபாச பட வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ராஜ்குந்தராவின் விவகாரத்திற்கு இவர்கள் எதிர்ப்பு தெரிவிக்காததுதான் காரணம் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் நடிகை ராதிகா ஆப்தேவிற்கு ஆதரவான கருத்துகளையும் அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். சினிமா துறையில் இதுபோன்ற விமர்சனங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கும் என்பது உண்மைதான் என்றாலும் நடிகைகள் ஆபாசமாக நடிக்கக்கூடாது என்பதுபோன்ற எதிர்ப்பு கிளப்பி இருப்பது பாலிவுட் வட்டாரத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தன்மீதான விமர்சனத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளாத நடிகை ராதிகா ஆப்தே மீண்டும் தன்னுடைய புகைப்படங்களை இன்ஸடாவில் பதிவிட்டு உள்ளார். அது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com