பிரபல பாலிவுட் நடிகை காத்ரீனா கைஃபுக்கு கொரோனா தொற்று!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாலிவுட் நடிகை காத்ரீனா கைப் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்துக் கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
இதுகுறித்து காத்ரீனா கைஃப் இன்ஸ்டாகிராமில் கூறியதாவது: இன்று எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்த வீட்டில் நான் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். நான் மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை எடுத்து வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தயவு செய்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அனைவரின் அன்பு மட்டும் ஆதரவுக்கு நன்றி. தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் பாலிவுட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க காத்ரீனா கைஃப் ஒப்பந்தம் ஆனார் என்பதும் இந்த படத்தை ’அந்தாதூன்’ படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் என்பவர் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘மேரி கிறிஸ்மஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க உள்ள நிலையில் திடீரென காத்ரீனா கைஃப் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments