தமிழில் மீண்டும் கங்கனா ரனாவத்.. இயக்குனர், நாயகன், இசையமைப்பாளர் யார் யார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவான முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தலைவி’ என்ற திரைப்படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நடித்தார் என்பது தெரிந்தது. இந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறாத நிலையில் அவர் மீண்டும் வா உருவான ’சந்திரமுகி 2’ படத்தில் நடித்தார் என்பதும் இந்த படமும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது கங்கனா ரனாவத் மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார் என்றும் இந்த படத்தின் நாயகன், இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
கங்கனா ரனாவத் நடித்த ‘தலைவி’ படத்தை இயக்கிய விஜய் தான் மீண்டும் இந்த படத்தை இயக்கி வருவதாகவும் இந்த படத்தின் நாயகனாக நடிகர் மாதவன் நடித்து வருவதாகவும் தெரிகிறது. மேலும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் விஜய்யின் படங்களுக்கு பொதுவாக ஜிவி பிரகாஷ் தான் இசையமைத்து வரும் நிலையில் ’வனமகன்’ படத்திற்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் மீண்டும் விஜய்யுடன் கைகோர்த்து உள்ளார், இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் மற்றும் அஹிம்சா என்டர்டைன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த மேலும் சில விவரங்கள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout