நடிகை கங்கனாவுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்: எந்த வழக்கில் தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,March 25 2021]

பிரபல பாலிவுட் நடிகையும் தமிழில் ’தலைவி’ என்ற திரைப்படத்தின் நாயகியுமான கங்கனா ரனாவத்துக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நடிகை கங்கனா ரனாவத் பேட்டி அளித்த போது நடிகர் சுசாந்த்சிங் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தைக் கூறினார். இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பிரபல பாலிவுட் பாடலாசிரியர் ஜாவித் அக்தர் அவர்கள் மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் தம்மைத் தொடர்பு படுத்தி கங்கனா பேசியுள்ளதாக கூறியிருந்தார். இந்த வழக்கின் விசாரணை பலமுறை நடந்தபோது அதில் கங்கனா ரணாவத் ஆஜராகாமல் இருந்ததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் மும்பை நீதிமன்றத்தில் தன் மீதான பிடிவாரண்டை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஜாமின் வழங்க வேண்டும் என்றும் நடிகை கங்கனா மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்த போது மும்பை நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.