சினிமாக்காரர்கள் கோழைகள், முதுகெலும்பு இல்லாதவர்கள்: விளாசிய பிரபல நடிகை!

  • IndiaGlitz, [Saturday,December 21 2019]

திரைத்துறையினர் எதற்கெடுத்தாலும் பயப்படுகிறார்கள் என்றும் அவர்கள் கோழைகள் மற்றும் முதுகெலும்பு இல்லாதவர்கள் என்றும் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியுரிமை சீர்திருத்த சட்ட மசோதா குறித்து ஒரு சில நடிகர்களே தங்களது கருத்துக்களை சமூக வலை தளங்கள் மூலம் தெரிவித்திருக்கும் நிலையில் முன்னணி நடிகர்கள் பலர் இன்னும் வாயை திறக்காமல் உள்ளனர். இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அவர்கள் ’பாலிவுட் நடிகர்கள் குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து வாய் திறக்காமல் இருப்பதற்கு வெட்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோழைகள் என்றும் முதுகெலும்பு இல்லாதவர்கள் என்றும் விமர்சித்துள்ளார்.

தங்களை கலைஞர்கள் என்றும் தாங்கள் எதற்காக நாட்டை பற்றி கவலைப்பட வேண்டும் என்றும் தங்களை தாங்களே கேட்டுக் கொள்ளும் அவர்கள், மக்களால் தான் உருவாக்கப்பட்டவர்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், மக்களுக்காக குரல் கொடுக்க பயந்தால் அவர்கள் அந்த இடத்தில் இருக்க தகுதியற்றவர்கள் என்றும் கங்கனா தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் பதிவு போடுவது மட்டுமே அவர்களுடைய வேலை இல்லை என்றும் கூறிய கங்கனா குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து தைரியமாக தங்கள் கருத்துக்களை தெரிவிக்க பாலிவுட் நடிகர்கள் முன்வரவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாலிவுட் முன்னணி நடிகர்கள் யாரும் இந்த சட்டம் குறித்து கருத்து கூறாமல் இருப்பதே கங்கனா ரனாவத் இந்த ஆவேசத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.