பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கர்ப்பம்.. எந்த மாதத்தில் குழந்தை பிறக்கும்?
- IndiaGlitz, [Thursday,February 29 2024]
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தான் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளதையடுத்து வரும் செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் என்பவரை தீபிகா படுகோன் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் திருமணத்திற்கு பின் ஆறு ஆண்டுகளுக்கு கழித்து அவர் கர்ப்பமாக உள்ளார்.
சற்று முன் தீபிகா படுகோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தைகளுக்கான உடைகள் மற்றும் சில பொருட்களை பதிவு செய்து நடுவில் ’செப்டம்பர் 2024’ என்று குறிப்பிட்டு தீபிகா - ரன்வீர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் அவருக்கு செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்கும் என்பதை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து பல பாலிவுட் பிரபலங்கள் தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சோனு சூட், பிரியங்கா சோப்ரா, மௌனி ராய், ஹன்சிகா, பிபாஷா பாசு உள்ளிட்ட பலர் இந்த தம்பதிகளுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை தீபிகா படுகோன் தற்போது பிரபாஸ், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ’கல்கி 28 98 ஏடி’ மற்றும் ’சிங்கம் அகெய்ன்’ என இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் விரைவில் அந்த படங்களின் படப்பிடிப்பை அவர் முடித்து விடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.