திருமணம், பார்ட்டிக்கு சென்றாலும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் திரையுலக பிரபலங்கள்!

  • IndiaGlitz, [Monday,July 18 2022]

திரையுலகில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பிரபலங்கள் திருமணம் மற்றும் பார்ட்டிக்கு சென்று நடனமாடுவதற்கும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக பாலிவுட் நடிகர், நடிகைகள் திருமணம், பிறந்த நாள் பார்ட்டி ஆகியவற்றில் கலந்து கொண்டு நடனமாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள் என்றும் இதற்காக அவர்கள் கோடிக்கணக்கில் கட்டணங்கள் வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் ஷாருக்கான் திருமணம் மற்றும் பிறந்த நாள் பார்ட்டியில் நடனமாடிய 3 கோடி ரூபாய் கட்டணம் பெறுவதாக தெரிகிறது.

அதேபோல் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காத்ரீனா கைஃப், திருமணம் பிறந்த நாள் பார்ட்டிக்கு ஷாருக்கானை விட அதிகமாக அதாவது மூன்றரை கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஹிருத்திக் ரோஷன் திருமணம் மற்றும் பிறந்த நாள் பார்ட்டியில் கலந்து கொள்ள இரண்டரை கோடி ரூபாய் வசூல் செய்வதாக தெரிகிறது.

பாலிவுட்டின் நம்பர் 1 நடிகர் என்று போற்றப்படும் சல்மான்கான் திருமணம் மற்றும் பிறந்தநாள் தனியார் பார்ட்டிகளில் நடனமாட இரண்டு கோடி ரூபாய் வசூல் செய்ததாக தெரிகிறது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோனே திருமணம் மற்றும் பிறந்தநாள் பார்ட்டிகளில் நடனமாட ஒரு கோடி ரூபாய் வசூல் செய்கிறார்.

தீபிகா படுகோனின் கணவரும் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் திருமணம் மற்றும் பிறந்தநாள் பார்ட்டிகளில் நடனமாட தனது மனைவிக்கு சமமாக ஒரு கோடி ரூபாய் வசூல் செய்கிறார்.

இந்திய திரையுலகில் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் நடித்து வரும் நடிகை ப்ரியங்கா சோப்ரா பிறந்தநாள் மட்டும் திருமண நிகழ்ச்சியில் நடனமாட இரண்டரை கோடி ரூபாய் வசூல் செய்கிறார் என்று கூறப்படுகிறது.

அதேபோல் அக்ஷய்குமார், ரன்பீர் கபூர் உள்ளிட்ட பிரபலங்களும் கோடிக்கணக்கில் பார்ட்டிகளில் நடனமாட வசூல் செய்ததாக தெரிகிறது. கோடிக்கணக்கில் சம்பளம் பெற்று சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி இதுபோன்ற பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் ஒரு சில மணி நேரங்கள் மட்டும் நடனமாட கோடிக்கணக்கில் நடிகர், நடிகைகள் வசூல் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.