ரஜினிக்கு கொரோனா பாசிட்டிவ்: டுவீட் போட்டு பின் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்!

ரஜினிகாந்த்துக்கு கொரோனா பாசிட்டிவ் என காமெடிக்கு ஒரு டுவிட் போட்டு அதன் பின் ரஜினி ரசிகர்களால் கண்டனம் தெரிவிக்கப்பட்டதால் தனது செய்கைக்கு வருத்தம் தெரிவித்த பாலிவுட் நடிகர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பிரபல பாலிவுட் நடிகர் ரோஹித் ராய் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் ரஜினிகாந்த் அவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது கொரோனாவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்று நகைச்சுவையாக ஒரு டுவிட்டை பதிவு செய்தார்

இந்த டுவிட் மிகப்பெரிய அளவில் வைரலான நிலையில் ரஜினி ரசிகர்கள் இந்த டுவீட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். ரோஹித் ராயை விமர்சனம் செய்து நூற்றுக்கணக்கான கமெண்ட்டுக்கள் பதிவாகின. இதனை அடுத்து இந்த டுவிட்டை தான் யாரையும் புண்படுத்துவதற்காக பதிவு செய்யவில்லை என்றும் வழக்கமாக ரஜினியை வைத்து பதிவு செய்யப்படும் ஜோக்குகள் போல் நகைச்சுவைக்காக தான் பதிவு செய்தேன் என்றும் ரோஹித் ராய் விளக்கமளித்தார். மேலும் தனது டுவிட் ரஜினி ரசிகர்களின் மனதை புண்படுத்தியிருந்தால் தான் வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும் கூறினார். இதனை அடுத்து ரஜினி ரசிகர்கள் அமைதி ஆனார்கள்

More News

ஆந்திர அரசால் முடியும்போது, தமிழக அரசால் முடியாதா? விஜயகாந்த் அறிக்கை

ஆந்திராவில் ஆட்டோ, கால் டாக்சி ஒட்டுநர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது போல் தமிழகத்திலும் ஆட்டோ, கால் டாக்சி ஒட்டுநர்களுக்கு வழங்க வேண்டும்

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் கட்டணம் எவ்வளவு? தமிழக அரசு நிர்ணயம்

சமீபத்தில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் குறித்து ஐ.எம்.ஏ தனது பரிந்துரைகளை தெரிவித்து இருந்தது.

ஜார்ஜ் ஃபிளாய்ட் கொலை: இனவெறிக்கு எதிரான பேரணியில் கலந்து கொண்ட கனட அதிபர்!!!

அமெரிக்காவில் கடந்த மே 25 ஆம் தேதி ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் காவல் துறையினரின் பிடியில் சிக்கி உயிரிழந்தார்.

குழந்தைகளுக்கு லாலிபாப் வாங்க நினைத்த அமைச்சரின் பதவி பறிபோனது!!! காரணம் என்ன தெரியுமா???

மடகாஸ்கரில் கோவிட் ஆர்கானிக் என்ற மூலிகை மருந்து கொரோனா நோய்த் தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தப் பட்டு வருகிறது.

நயன்தாரா - ரம்யா கிருஷ்ணன்: அம்மன் வேடத்தில் பெஸ்ட் யார்? 

தமிழ் சினிமாவில் இதுவரை பல அம்மன் திரைப்படங்கள் வந்துள்ளன என்பதும் அவற்றில் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன என்பதும் தெரிந்ததே.