கர்ப்பமான மனைவி வயிற்றில் முத்தமிடும் இந்த நடிகர் யார் தெரியுமா?
- IndiaGlitz, [Friday,June 04 2021]
பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் தனது கர்ப்பமான மனைவியின் வயிற்றில் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படம் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமீர்கான் நடித்த ’டங்கல்’ திரைப்படம் உள்பட பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்த நடிகர் அபர்ஷக்தி குரானா. இவருக்கும் தொழிலதிபர் ஆக்ருதி அகுஜா என்பவருக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. நடன வகுப்பு ஒன்றில் இருவரும் சந்தித்த போது ஏற்பட்ட காதலை அடுத்து இருவருக்கும் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திருமணம் நடந்து ஏழு ஆண்டுகள் கழித்து கடந்த சில மாதங்களுக்கு முன் ஆக்ருதி அகுஜா கர்ப்பமானார். இன்னும் ஒரு சில வாரங்களில் அவருக்கு குழந்தை பிறக்க உள்ளது. இந்த நிலையில் நடிகர் அபர்ஷக்தி குரானா தனது கர்ப்பமான மனைவியின் வயிற்றில் முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதே புகைப்படத்தை ஆக்ருதி அகுஜாவும் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் நடிகை காஜல் அகர்வால் உட்பட லட்சக்கணக்கானோர் இந்த புகைப்படத்தை லைக் செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.