சிவகார்த்திகேயன் படத்திலும் பாலிவுட் வில்லன்!

  • IndiaGlitz, [Thursday,January 09 2020]

தமிழ் சினிமாவில் பிரபலமான பாலிவுட் நடிகர்கள் வில்லன் வேடத்தில் நடித்து வருவது வழக்கமான ஒன்றாக கருதப்படுகிறது. அஜித் நடித்த விவேகம் படத்தில் விவேக் ஓபராய், ரஜினி நடித்த 2.0 படத்தில் அக்ஷய்குமார், ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தில் சுனில்ஷெட்டி உள்பட பல தமிழ் படங்களில் பாலிவுட் பிரபலங்கள் வில்லன் கேரக்டரில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் அடுத்த படத்திலும் பாலிவுட் பிரபல நடிகர் ஒருவர் வில்லன் கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ’நம்ம வீட்டு பிள்ளை’ மற்றும் ’ஹீரோ’ஆகிய திரைப்படங்கள் நல்ல வெற்றியைப் பெற்ற நிலையில் தற்போது அவர் ’இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்

சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடித்து வரும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் இசை அமைத்து வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷரத் கெல்கர் என்பவர் வில்லனாக நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தின் மூலம் அவர் தமிழில் அறிமுகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ’நரசிம்மா’ படத்தில் விஜயகாந்த் ஜோடியாக நடித்த இஷா கோபிகர் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது