அடுத்த மாத மின்கட்டணத்திற்கு சிறுநீரகங்களை தான் விற்க வேண்டும்: பிரபல நடிகரின் ஷாக் பேட்டி

  • IndiaGlitz, [Tuesday,July 07 2020]

மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான மின் கட்டணம் வந்திருப்பதாகவும் இந்த மாதம் தனது ஓவியங்களை விற்று மின் கட்டணத்தை கட்டியதாகவும் அடுத்த மாத மின்கட்டணத்திற்கு தனது சிறுநீரகங்களை தான் விற்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் பிரபல நடிகர் ஒருவர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் மின் கட்டணம் மிக அதிகமாக வருவதாக ஏற்கனவே பல நடிகர் நடிகைகள் தங்களுடைய சமூக வலைதளங்களில் புகார் கூறியுள்ளது குறித்து பார்த்தோம். இந்த நிலையில் நடிகர் பாடகர் ஓவியர் என பன்திறமை கொண்ட ஹர்சன் வர்சி என்பவரின் வீட்டிற்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான மின் கட்டணம் வந்துள்ளதாக தெரிகிறது. அது மட்டுமின்றி அவருக்கு வந்த மின் கட்டணத்திற்காக அவரது வங்கி கணக்கில் இருந்து அவரை கேட்காமலேயே மின் துறையினர் பணத்தை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஹர்சன் வர்சி மின் கட்டணம் என்ற பெயரில் கொள்ளை நடந்து வருவதை தடுக்க யாருமே இல்லை என்று வருத்தத்துடன் கூறியுள்ளார். மேலும் நான் வரைந்த ஓவியங்களை தற்போது விற்றுத்தான் வீட்டு செலவை கவனித்து வருவதாகவும் இந்த மின் கட்டணம் அடுத்த மாதமும் தொடர்ந்தால் அடுத்த மாதம் மின் கட்டணம் கட்ட என்னுடைய சிறுநீரகங்களை தான் விற்க வேண்டிய நிலைமை வரும் என்றும் அவர் கூறி உள்ளார்.

இந்த லாக்டவுன் நேரத்தில் தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தை பயன்படுத்தி ஓவியம் வரைந்து கொண்டிருப்பதாகவும், இந்த ஓவியத்தை தயவு செய்து அனைவரும் வாங்கி தனக்கு உதவி செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். பிரபல நடிகரின் இந்த பேட்டி பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

'செத்துப்போ' என கூறிய காதல் மனைவி, தூக்கில் தொங்கிய கணவன்: திருமணமான இரண்டே மாதத்தில் சோகம்

திருமணமான இரண்டே மாதங்களில் காதல் மனைவி 'செத்துப்போ'என கூறியதை அடுத்து மனம் உடைந்த கணவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இந்தியாவை அடுத்து அமெரிக்கா, ஆஸ்திரேலியாவிலும் தடையா? டிக்டாக் நிறுவனத்திற்கு சிக்கல்

இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்களிடையே கால்வான் பள்ளத்தாக்கில் சமீபத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

தங்கிய ஹாஸ்டல் திருமணம் செய்து கொண்ட காதல் மருத்துவர்கள்: நண்பர்கள் வாழ்த்து

இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் ஆடம்பரமாக நடத்த திட்டமிட்டிருந்த பல திருமணங்கள் ஊரடங்கு காரணமாக எளிமையாக நடத்தப்பட்டு வருவது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

கொரோனா வைரஸ் போரில் களமிறங்கும் கவுதம் மேனன்!

கொரோனா வைரஸ்க்கு எதிராக இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தும் தினமும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டும், நூற்றுக்கணக்கானோர்

திருச்சி அருகே 9ஆம் வகுப்பு மாணவி எரித்து கொலை: ஜெயப்ரியாவை அடுத்து இன்னொரு கொடூரம்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி ஜெயப்ரியா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் நடந்து இரண்டு நாட்களில் தற்போது திருச்சி அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவி