'மாஸ்டர்' படம் பார்த்து மிரண்டு விட்டேன்: பிரபல பாலிவுட் நடிகர் பேட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தை பார்த்து மிரண்டு விட்டேன் என்றும் விஜய்க்கு நான் மிகப்பெரிய ரசிகர் என்றும் பிரபல பாலிவுட் நடிகர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர்கபூர், ஆலியா பட், அமிதாப்பச்சன், நாகார்ஜூனா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ’பிரம்மாஸ்திரா’. கடந்த 5 ஆண்டுகளாக இந்த படம் உருவாக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது
இந்த படம் குறித்த பேட்டி ஒன்றில் ரன்பீர் கபூர் கூறியபோது, ‘தமிழ் திரைப்படங்கள் தற்போது மிகச் சிறந்த கதையம்சம் கொண்ட படமாக வருகிறது என்றும் வாழ்க்கைக்கு தேவையான அம்சங்களை கமர்ஷியலோடு தமிழ் சினிமா தருகிறது என்றும் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ரசிகர் நான் என்றும் கூறினார்
குறிப்பாக அஜித், விஜய், ரஜினி, சூர்யா ஆகியோர்களின் படங்களை நான் விரும்பிப் பார்ப்பேன் என்று கூறிய ரன்பீர் கபூர், ‘மாஸ்டர்’ படத்தை நேற்று பார்த்தோம் என்றும், அந்த படத்தை பார்த்து மிரண்டு விட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த பேட்டியின் வீடியோவை அஜித்-விஜய் ரசிகர்கள் தங்களது சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர்.
#RanbirKapoor about #Thalapathy & #Master ?? pic.twitter.com/9Dgt1cFj2d
— Vijay Fans Updates (@VijayFansUpdate) June 11, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com