23 ஆயிரம் சினிமா தொழிலாளிகளின் வங்கிக்கணக்கில் ரூ.3000 டெபாசிட் செய்த பிரபல நடிகர்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில வாரங்களாக படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் நிலையில் சினிமா தொழிலாளிகளின் பசியைப் போக்குவதற்காக தமிழ் திரையுலகை சேர்ந்த உச்ச நட்சத்திரங்கள் பலர் லட்சக்கணக்கில் நிதி உதவியை செய்து வருகின்றனர் என்பதும், ஒரு சிலர் நூற்றுக்கணக்கான மூடை அரிசிகள் கொடுத்து உதவி வருகின்றனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கோலிவுட்டை போலவே பாலிவுட்டிலும் சுமார் 23 ஆயிரம் தினக்கூலி தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக படப்பிடிப்பு இல்லாமல் மிகுந்த கஷ்டப்பட்ட கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியானது.

இதனை அடுத்து பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் அவர்கள் இந்திய சினிமா ஊழியர் சம்மேளனத்தின் தலைவரிடம் தினக் கூலி தொழிலாளர்களின் பட்டியலையும் அவர்களுடைய வங்கிக் கணக்கையும் வாங்கி, ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் ரூபாய் 3000 முதல் கட்டமாக அவர்களுடை வங்கி கணக்கில் டெபாசிட் செய்துள்ளார்.

இது முதல் தவணைதான் என்றும் இதே போல் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தால் மீண்டும் பண உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் சல்மான்கான் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்திய சினிமா ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் திவாரி அவர்கள் சல்மான்கானுக்கு நன்றி கூறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

விஜயகாந்த் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு: மருத்துவமனையாக மாறும் கல்லூரி

கொரோனா வைரஸால் தமிழகத்தில் தினந்தோறும் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் பொதுமக்களும், திரையுலக பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும்

சமூக விலகலை கடைபிடிக்க கூறிய 'பொன்னியின் செல்வன்' நடிகருக்கு கொலை மிரட்டல்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து அனைத்து நாட்டு அரசுகளும் கூறிவரும் ஒரே அறிவுரை சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும்

கொரோனாவிற்கு பலியான கிராமி விருது பெற்ற பிரபலம்: ரசிகர்கள் அதிர்ச்சி

உலகம் முழுவதும் மனித இனத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஏழை பணக்காரர் முதல் பாமரன் முதல் பதவியில் இருப்பவர்கள் வரை அனைவரும் பாகுபாடின்றி தாக்கி வருகிறது

எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி குறித்து ஏன் விவாதம் எழுப்பப்படுகிறது???

கொரோனா நிவாரண நிதிக்காக, மத்திய அரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தில் அடுத்த ஒரு ஆண்டிற்கு 30 விழுக்காடு குறைத்திருக்கிறது.

உலகம் முழுவதும் கொரோனாவுக்காக உருவாக்கப்பட்ட புதிய மருத்துவமனைகள்!!!

கொரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 1 லட்சத்து 44 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 83 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது.