பாலிவுட் நடிகர் ரிஷிகபூர் மறைவு: ரஜினி, கமல் இரங்கல்

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ரிஷிகபூர் நேற்றிரவு உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் அவர் சிகிச்சையின் பலனின்றி காலமானார் என செய்தி வெளிவந்துள்ளது. இந்த செய்தியை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.

67 வயதான ரிஷிகபூர் கடந்த ராஜ்கபூரின் ‘மேரே நாம் ஜோக்கர்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக கடந்த 1970ஆம் ஆண்டு அறிமுகமாகி, முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றார். அதன்பின்னர் ’பாபி’ உள்பட பல திரைப்படங்களில் ரிஷிகபூர் நடித்து பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக விளங்கினார்.

இந்த நிலையில் ரிஷிகபூர் மறைவிற்கு ஏராளமான பாலிவுட் நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர். எனது மிகச்சிறந்த நண்பர் ரிஷிகபூர் மறைவு கேட்டு என் இதயம் நொறுங்கியது, அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்’ என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரிஷிகபூர் மறைந்துவிட்டார் என்பதை நம்பவே முடியவில்லை. எப்போதும் புன்னகையுடன் உள்ளவர். நாங்கள் இருவரும் அன்பையும் மரியாதையும் அடிக்கடி பரிமாறி கொள்வோம். எனது சிறந்த நண்பரை இழந்துவிட்டேன். அவரது குடும்பத்தினர்களுக்கு எனது இரங்கல்கள்’ என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

More News

கொரோனா சிகிச்சையில் Remdesivir மருந்தின் வெற்றியால் அமெரிக்க, ஆசிய பங்குச் சந்தைகளில் ஏற்றம்!!! நடப்பது என்ன???

Remdesivir மருந்தின் சோதனை முடிவுகளால் தற்போது வெள்ளை மாளிகை அதிகாரிகள் நம்பிக்கை பெற்று உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் எவை எவை? மண்டலவாரி பட்டியல்

தமிழக அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டாலும் தலைநகர் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது

கொரோனாவுக்கு எதிரான போரில் சிறப்பாகப் பணியாற்றும் உலக நாடுகளின் பெண் தலைவர்கள்!!!

உலக நாடுகளில் பெண் தலைவர்கள் ஆட்சி செய்யும் நாடுகளில் கொரோனா கட்டுக்குள் இருப்பதாகத் தற்போது செய்திகள் வலம் வருகின்றன.

கொரோனா வார்டில் 20 நாட்கள் தொடர்பணி: வீடு திரும்பிய பெண்ணுக்கு காத்திருந்த ஆச்சரியம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி மனித இனத்திற்கே அச்சத்தை கொடுத்து வரும் நிலையில் தற்போது மருத்துவர்களும் நர்சுகளும் மருத்துவ ஊழியர்களும்

பழம்பெரும் பாலிவுட் நடிகர் மருத்துவமனையில் அனுமதி:

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான்கான் நேற்று மரணம் அடைந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் பாலிவுட் திரை உலகினர் மீளமுடியாத நிலையில் தற்போது பழம்பெரும் பாலிவுட் நடிகர் ரிஷிகபூர் மூச்சுத்திணறல் காரணமாக