சமந்தாவை காப்பாற்றி பாதுகாப்பாக அழைத்து சென்ற பிரபல நடிகர்: வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை சமந்தாவை பத்திரிக்கையாளர் மற்றும் போட்டோகிராஃபர்களிடம் இருந்து காப்பாற்றி பாதுகாப்பாக பிரபல நடிகர் ஒருவர் அழைத்துச் சென்ற வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா, ‘தி ஃபேமிலி மேன்’ என்ற தொடரை இயக்கிய இயக்குநர்கள் டிஜே&ராஜ் இயக்கும் அடுத்த தொடரில் நடிக்க உள்ளார். இந்த தொடரில் வருண் தவான் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் வருண் தவான் மற்றும் சமந்தா ஆகிய இருவரும் இந்த தொடர் குறித்த பணி காரணமாக சமீபத்தில் டெல்லி சென்றிருந்த போது சமந்தாவை புகைப்படம் எடுக்கவும் அவரை பேட்டி எடுக்கவும் ஏராளமான பத்திரிகையாளர்கள் மற்றும் போட்டோகிராபர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து சமந்தாவை பாதுகாப்பாக அழைத்துச் சென்ற வருண் தவான்,
பத்திரிக்கையாளர்களிடம் ’சமந்தாவை பயமுறுத்த வேண்டாம்’ என்று கேட்டுக் கொண்டு அவரை பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
Omggg he is so caring:)
— SandhyaSamanthaFan™ (@SandhyaSamFan) March 11, 2022
Thanks @Varun_dvn
@Samanthaprabhu2 ??♥️??#SamanthaRuthPrabhu #VarunDhawan pic.twitter.com/mJAo2iO8Ak
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments