ரஜினியின் 'தர்பாரில் இணைந்த 'காலா' பட நடிகர்!

  • IndiaGlitz, [Tuesday,April 30 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு ஒருபுறம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் அவ்வப்போது இணையும் நடிகர், நடிகையர் குறித்த செய்திகள் இன்னொரு பக்கம் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

'தர்பார்' படத்தில் சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஜாட்டின் சர்னா என்பவர் இணைந்தார் என்பதும், இந்த படத்தில் இவர் வில்லன்களில் ஒருவராக நடிக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது தர்பார் படத்தில் காமெடி வில்லன் கேரக்டரில் பிரதீப் காப்ரா என்ற இன்னொரு பாலிவுட் நடிகர் நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ரஜினியின் 'காலா' படத்தில் நானா படேகரின் உதவியாளராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆர்யாவின் 'சேட்டை', சூர்யாவின் 'அஞ்சான்' உள்பட சில தென்னிந்திய படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

ரஜினியுடன் 'தர்பார்' படத்தில் முதல் நாள் நடிக்க வந்தபோது அந்த கூட்டத்திலும் தன்னை அடையாளம் கண்டுகொண்ட ரஜினி, 'நாம் ஏற்கனவே சேர்ந்து நடித்திருக்கின்றோமே' என்று ஞாபகம் வைத்திருந்தது தன்னை ஆச்சரியப்படுத்தியதாகவும், அவர் சினிமாவில் மிகப்பெரிய சாதனை செய்தவராக இருந்தாலும் எளிமையாக அனைவரும் அவரை எளிதில் அணுகும் வகையில் எளிமையாக இருப்பது தனக்கு ஆச்சரியமாக இருந்ததாகவும் பிரதீப் காப்ரா தெரிவித்தார்