எஸ்.ஜே.சூர்யா கேரக்டரில் பாலிவுட் பிரபலம் நடிக்க இருந்தாரா? 'மார்க் ஆண்டனி' குறித்த ஆச்சரிய தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான ‘மார்க் ஆண்டனி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியது என்பது தெரிந்ததே.
இந்த படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்ற நிலையில் விஷால் அதில் உருக்கமாக பேசினார் என்பதும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தனக்கு கிடைத்த வெற்றி படம் என்று அவர் பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தில் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா ஆகிய இருவரும் இரட்டை வேடங்களில் நடித்து கலக்கி இருந்தனர். குறிப்பாக எஸ்ஜே சூர்யா இந்த படத்தில் மதன் பாண்டியன் மற்றும் ஜாக்கி பாண்டியன் என அப்பா மகன் என இரண்டு கேரக்டர்களில் நடித்திருந்தார்.
ஆனால் முதலில் அப்பா கேரக்டரில் நடிக்க இருந்தது பிரபல பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் என்றும் அதன் பிறகு எஸ்.ஏ சூர்யா இயக்குனரிடம் நானே இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறேன் என்று கூறிய பின்னர் தான் அவருக்கு ஏற்ற மாதிரி சில காட்சிகள் மாற்றப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
எஸ்ஜே சூர்யா இரட்டை வேடத்தில் கலக்கி இருந்ததை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் எஸ்ஜே சூர்யா மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் எடுத்த முடிவு சரியானது என்பது தெரிய வந்துள்ளது. மொத்தத்தில் எஸ்.ஏ சூர்யாவின் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பு தான் ‘மார்க் ஆண்டனி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout