ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் இணையும் பாலிவுட் நடிகர்.. நிஜமான பான் - இந்தியா படமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் இணைந்த நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ஒருவரும் இணைந்துள்ளதால் இது நிஜமான பான் - இந்தியா திரைப்படம் என்று கூறப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக கூறப்படும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் சிவராஜ்குமார், மோகன் லால், சுனில் ஆகியோர் இணைந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அதுமட்டுமின்றி ஏற்கனவே ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகிபாபு, வசந்த் ரவி, அறந்தாங்கி நிஷா, பருத்திவீரன் சரவணன் உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் தமன்னா ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் இது குறித்து அறிவிப்பு இன்னும் ஒரிரு நாளில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. முதலில் இந்த கேரக்டரில் நடிக்க அமிதாப்பச்சனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் அதன் பின்னர் தற்போது ஜாக்கி ஷெராப் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout