பான் இந்திய திரைப்படமாகும் 'கூலி'.. ரஜினியுடன் இணைகிறாரா பிரபல பாலிவுட் நடிகர்?

  • IndiaGlitz, [Monday,July 08 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இணையும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகிறது. இந்நிலையில் பாலிவுட் பிரபலம் ‘கூலி’ படத்தில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த படம் பான் இந்திய திரைப்படமாக உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்த படத்தில் ஏற்கனவே ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா, மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சத்யராஜ் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இந்த படத்தில் இணைய இருப்பதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ரன்வீர் சிங் இந்த படத்தில் இணைவது உறுதி செய்யப்பட்டால் இந்த படம் பான் இந்திய திரைப்படமாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி மேலும் சில பாலிவுட் நட்சத்திரங்களும், தெலுங்கு பிரபல நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

 

More News

பிரபல நடிகை ஓவர் போதையால் தள்ளாடினாரா? டிராமாவா? .. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

பிரபல நடிகை ஒருவர் குடித்துவிட்டு தள்ளாடியபடி காரில் ஏறுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இது குறித்து ரசிகர்கள் பதிவு செய்து வரும் கமெண்ட்ஸ் பரபரப்பை படித்து உள்ளது.

800 கோடி ரூபாய் எங்கே இருக்கிறது என்று எனக்கு தெரியாது.. சரத்குமாரின் பரபரப்பு பேச்சு..!

விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்தில் நடிகர் சரத்குமார் பேசியபோது 800 கோடி ரூபாய் எங்கே இருக்கிறது என்று எனக்கு தெரியாது என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒன்றல்ல.. இரண்டு போஸ்டர்.. 'விடாமுயற்சி' அப்டேட் கொடுத்த சுரேஷ் சந்திரா.. எப்போது?

அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஞாயிறு அன்று வெளியான நிலையில் இன்று செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் சற்றுமுன்

விஜய் அழைத்தால் அவரது கட்சியில் சேருவேன்.. திமுக, அதிமுக, பாஜகவில் இருந்த நடிகர் பேச்சு..!

திமுக, அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகிய கட்சிகளில் இருந்த நடிகர் தான் இப்போது எந்த கட்சியிலும் இல்லை என்றும் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதை வரவேற்பதாகவும் அவர் அழைத்தால்

சமந்தாவிடம் வருத்தம் தெரிவித்த டாக்டர்.. ஆனாலும் நீங்க செய்தது தப்புதான்..!

https://cinema.vikatan.com/kollywood/theliverdoc-apologises-to-samantha-ruth-prabhu-for-endangering-public-health