தனுஷ் - சேகர் கம்முலா படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடிப்பில் இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம். இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கும் நிலையில் முக்கிய கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பாலிவுட் பிரபலம் ஒருவர் இணைந்துள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது. அவர்தான் ஜிம் சர்ஃப்.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வரும் ஜிம் சர்ஃப் தனுஷின் அடுத்த படத்தில் இணைந்துள்ளதை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது
ஏற்கனவே இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் - இந்திய திரைப்படமாக உருவாகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பாலிவுட் நடிகர் இந்த படத்தில் இணைந்துள்ளார்.
A master of his craft 😎@jimSarbh is now immersed in the enchanting universe of #DNS ❤️🔥
— Sree Venkateswara Cinemas LLP (@SVCLLP) January 26, 2024
Brace yourself for his MASTERCLASS performance 🤘@dhanushkraja @iamnagarjuna @iamRashmika @sekharkammula @AsianSuniel @ThisIsDSP @puskurrammohan @SVCLLP @amigoscreation @UrsVamsiShekar pic.twitter.com/2shjn5hLwF
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments