தனுஷ் - சேகர் கம்முலா படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Friday,January 26 2024]

தனுஷ் நடிப்பில் இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம். இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கும் நிலையில் முக்கிய கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பாலிவுட் பிரபலம் ஒருவர் இணைந்துள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது. அவர்தான் ஜிம் சர்ஃப்.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வரும் ஜிம் சர்ஃப் தனுஷின் அடுத்த படத்தில் இணைந்துள்ளதை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது

ஏற்கனவே இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் - இந்திய திரைப்படமாக உருவாகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பாலிவுட் நடிகர் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

More News

மோகன்லாலின் 'நேரு' உட்பட இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்.. முழு விவரங்கள்..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாவது போல் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

'அயலான்' படம் பார்த்துவிட்டு ரஜினி சொன்ன ஒரு வார்த்தை: சிவகார்த்திகேயன் பெருமிதம்..!

 சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு சொன்ன ஒரு வார்த்தை தனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாக சிவகார்த்திகேயன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கட்சி தொடங்கும் முன்பே தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் தேர்வா? செம்ம ஸ்பீடில் விஜய்..!

தளபதி விஜய் நேற்று விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை செய்தார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி விஜய் அரசியல் கட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டது

உதிரம் உள்ள கைகளுடன் உதிரன்..  செம்ம அப்டேட்டுடன் 'கங்குவா' புதிய போஸ்டர்..!

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை எட்டி உள்ள நிலையில் இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டு செம அப்டேட்

இலங்கையில் இருந்து பவதாரிணி உடல் சென்னை வருவது எப்போது? சோகமாக காத்திருக்கும் திரையுலகம்..!

இசைஞானி இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி நேற்று இலங்கையில் புற்றுநோய் காரணமாக காலமான நிலையில் அவரது உடல் இன்று மாலை சென்னை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.